Sunday, November 3
Shadow

பெள பெள – திரைவிமர்சனம் Rank 2.5/5

நாய்க்கும் ஒரு குட்டிப் பையனுக்குமான பாசத்தின் நீள அகலமே பெள பெள!

அப்பா – அம்மாவை இழந்த குட்டிப் பையன் அஹான் தாத்தா – பாட்டியின் அரவணைப்பில் வாழ்கிறான்.

அவனுக்கும் தெருநாய் ஒன்றுக்கும் அடிக்கடி முட்டல் மோதல் ஏற்படுகிறது.

தான் ஒரு நாய் வளர்த்து, தனக்கு டார்ச்சர் கொடுக்கும் நாயை ஒரு வழி பண்ண வேண்டும் என நினைக்கிறான் அஹான்.

பேரனின் ஆசையை தாத்தா நிறைவேற்றுகிறார்.

தாத்தா வாங்கிக் கொடுத்த நாயை பாசமாக வளர்க்கிறான் ஆஹான்.

அந்த நாய் வீராதி வீரனாக, சூராதி சூரனாக இருக்கும், தன்னுடைய எதிரி நாய்க்கு டெரர் வில்லனாக மாறும் என எதிர்பார்த்தால், அது வீட்டுக்குள் நுழையும் திருடன் தன்னுடன் செல்பி எடுத்துக் கொள்கிற அளவுக்கு ஒத்துழைக்கிறது.

அஹான் அந்த நாய்க்கு டிரெய்னிங் கொடுத்து பலசாலியாக்குகிறான். சந்தர்ப்ப சூழ்நிலை அவனையும் நாயையும் பிரிக்கிறது.

பிரிந்தவர்கள் சேர்ந்தார்களா இல்லையா என்பது கிளைமாக்ஸ்!

குட்டிப் பையனாக ‘மாஸ்டர்’ அஹான். அழகாக இருக்கிறான். அதைவிட அழகாக சிரிக்கிறான். நாயுடன் பாசம் காட்டுவது, நாயைப் பிரியும்போது மனசு உடைந்து போவது என ஈர்க்கும்படி நடித்திருக்கிறான்.

படத்தில் ஒரு இளம் ஜோடி வருகிறது. அவர்களின் ரொமான்ஸ் எபிசோடுகள் கதையோடு அவ்வளவாய் ஒட்டாவில்லை.

மார்க் டி மியூஸ் மற்றும் ஏ. டெனிஸ் வல்லபன் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் திரைக்கதைக்கு வலு சேர்க்க முயற்சித்திருக்கின்றன!

படத்தில் வருகிற நாய்களுக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்து காட்சிகளுக்கு பலம் சேர்த்திக்கிற K9 பாஸ்கர், வரமணி இருவருக்கும் ஸ்பெஷல் பாராட்டுக்கள்!

உங்கள் வீட்டு குட்டிச் சுட்டிகளுக்கு பெள பெள செல்ல குட்டி !