
72வது தேசிய திரைப்பட விருதுகளில் இரட்டை வெற்றி: ‘பிரம்மயுகம்’ படத்திற்கு மேலும் ஒரு மகுடம்!
சென்னை, ஜூலை 18, 2026:
இந்திய சினிமாவின் கலைநயத்தையும், தொழில்நுட்பத் திறமையையும் உலக அரங்கில் எடுத்துக்காட்டிய ‘பிரம்மயுகம்’ திரைப்படம், 72வது தேசிய திரைப்பட விருதுகளில் இரண்டு முக்கியமான விருதுகளை வென்று தனது வெற்றிப் பயணத்தில் மேலும் ஒரு மைல்கல்லை பதித்துள்ளது.
நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ் மற்றும் ஒய் நாட் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்த இந்த திரைப்படம், சிறந்த நடிகர் (முதன்மை கதாபாத்திரம்) பிரிவில் நடிகர் மம்மூட்டி மற்றும் சிறந்த ஒளிப்பதிவாளர் பிரிவில் ஷெஹ்னாத் ஜலால் ஆகியோருக்கான தேசிய விருதுகளை பெற்றுள்ளது.
‘கொடுமன் போற்றி’ என்ற சவாலான கதாபாத்திரத்தில் மம்மூட்டி வெளிப்படுத்திய அசாதாரணமான நடிப்பும், படத்தின் மர்மமான உலகத்தை கருப்பு-வெள்ளை காட்சியமைப்பில் உயிர்ப்பித்த ஷெஹ்னாத் ஜலாலின் ஒளிப்பதிவும் இந்த தேசிய அங்கீகாரத்தின் மூலம் மேலும் சிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வெற்றியை முன்னிட்டு, விருது பெற்ற மம்மூட்டி மற்றும் ஷெஹ்னாத் ஜலால் ஆகியோருக்கு நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ் மற்றும் ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளன.
அதேபோல், இந்த உயரிய விருதுகளை வழங்கிய இந்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம், திரைப்பட விழாக்கள் இயக்குநரகம், தேசிய திரைப்பட மேம்பாட்டு கழகம் (NFDC) மற்றும் 72வது தேசிய திரைப்பட விருதுகளின் மதிப்பிற்குரிய நடுவர் குழுவிற்கும் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது நன்றியைத் தெரிவித்துள்ளன.
தேசிய திரைப்பட விருதுகளில் வெற்றி பெற்ற அனைத்து கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் படைப்பாளிகளுக்கும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களின் படைப்புகள் இந்திய சினிமாவை உலகளவில் மேலும் உயர்த்தும் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளியான முதல் நாளிலிருந்தே விமர்சகர்கள் மற்றும் திரைப்பட ரசிகர்களின் பாராட்டைப் பெற்ற ‘பிரம்மயுகம்’, 55வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் இந்தியன் பனோரமா பிரிவில் அதிகாரப்பூர்வமாகத் தேர்வானது. மேலும், அமெரிக்காவின் Academy Museum of Motion Pictures அரங்கிலும் திரையிடப்பட்டு சர்வதேச கவனத்தை ஈர்த்தது. 2024 கேரள மாநில திரைப்பட விருதுகளிலும் பல்வேறு விருதுகளை வென்றுள்ள இப்படம், இந்திய மற்றும் உலக திரைப்பட விழாக்களில் தொடர்ந்து பாராட்டுகளை குவித்து வருகிறது.
72வது தேசிய திரைப்பட விருதுகளில் கிடைத்த இந்த இரட்டை அங்கீகாரம், நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ் மற்றும் ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனங்களின் தரமான திரைப்படங்களை உருவாக்கும் பயணத்திற்கு மேலும் வலுசேர்த்துள்ளது. இந்திய கலாச்சாரத்தை உலகத் தரத்தில் எடுத்துச் செல்லும் புதிய முயற்சிகளை தொடர்ந்து முன்னெடுப்போம் என்ற அவர்களின் உறுதிப்பாட்டிற்கும் இந்த வெற்றி வலிமையான சான்றாக அமைந்துள்ளது.

‘Bramayugam’ Wins Two Honours at the 72nd National Film Awards
Chennai, July 18, 2026:
Acclaimed Malayalam film Bramayugam has added another milestone to its remarkable journey by winning two prestigious honours at the 72nd National Film Awards (2024). Produced by Night Shift Studios and YNOT Studios, the film secured awards for Best Actor (Leading Role) for Mammootty and Best Cinematography for Shehnad Jalal.
Mammootty’s extraordinary portrayal of Kodumon Potti earned widespread appreciation from audiences and critics alike, while Shehnad Jalal’s striking black-and-white cinematography played a pivotal role in shaping the film’s haunting visual identity. Their exceptional contributions have now been recognised with India’s highest honour in cinema.
The producers extended their heartfelt congratulations to Mammootty and Shehnad Jalal for this remarkable achievement. They also expressed their gratitude to the Directorate of Film Festivals, the Ministry of Information and Broadcasting, Government of India, the National Film Development Corporation (NFDC), and the esteemed jury of the 72nd National Film Awards for recognising the film’s artistic excellence.
The production houses also congratulated all the winners of this year’s National Film Awards, acknowledging their outstanding contributions to Indian cinema and their continued efforts in elevating the country’s filmmaking standards on the global stage.
Since its release, Bramayugam has received widespread critical acclaim in India and across international markets. The film was officially selected for the Indian Panorama section at the 55th International Film Festival of India (IFFI) and was also screened at the Academy Museum of Motion Pictures in Los Angeles, USA. In addition, it received multiple honours at the 2024 Kerala State Film Awards, further cementing its reputation as one of the most celebrated Indian films of recent times.
The twin victories at the 72nd National Film Awards mark a proud achievement for both Night Shift Studios and YNOT Studios. The recognition reinforces their commitment to producing distinctive, culturally rooted, and globally impactful cinema that continues to resonate with audiences worldwide.
