தல புகழ் ரஜினிக்கு இணையாக வெளி நாடுகளிலும் பற்றி எரிகிறது. கிரிக்கெட் வீரர் பிரெட்லீ, ஒருமுறையாவது அஜித்தை சந்திக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்.
இப்போது உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றானது புருனே. இந்த நாட்டின் அரண்மனை தங்கத்தால் குவிக்கபட்டிருக்கும். உலகிலேயே ஆடம்பர வாழ்வின் உச்சம் புருனே நாடும் அதன் மன்னர் குடும்பமும் தான்.
கடந்த வாரம் அரண்மனையில் வெளிநாட்டு வைர முதலாளிகளுக்கு பெரிய விருந்து நடந்துள்ளது. இதில் பல நாட்டின் பாடல்களும் ஒலிக்க, தல பாட்டான ‘ஆலுமா டோலுமா’ பாடலும் ஒலிக்க விருந்தினர்கள் படு உற்சாகமாக ஆட ஆரம்பித்துள்ளனர்.
மீண்டும் மீண்டும் அதே பாடலை போட்டு ஆட புருனே இளவரசி அசந்து போனாராம். பின் தனது மெய்க்காப்பாளர்களை அழைத்து விவரம் கேட்க, அவர்கள் ‘தல’ பற்றிய விவரங்கள் படங்கள் அனைத்தும் சேகரித்து அடுத்த நாள் கொடுத்தார்களாம்.
இரண்டு நாட்கள் மொத்தமாக பார்த்த இளவரசி அசந்து போனாராம்.
என்ன கம்பீரம் என்ன அழகு. சிரிக்கும்போது மனசை அள்ளுகிறார். அவரை பார்க்கவேண்டுமே என்று உருகினாராம்.
தல தல தல போல வருமா தலை தல தான்