Monday, April 28
Shadow

கேமராவின் மொழியை புரிந்து கொண்டுவர் நயன்தாரா – ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர்

இமைக்கா நொடிகள்’ பார்த்தவுடன் எல்லோருடைய மனதிலும் உடனடியாக தாக்குகின்ற ஒரு தீப்பொறி அதன் காட்சியமைப்புகளாக தான் இருக்கும். தலைப்புக்கேற்ற மாதிரியே உண்மையில், அழகான காட்சியமைப்புகளால் கண்களை இமைக்காமல் பார்க்க வைக்கிறது. பொதுமக்களிடமிருந்து இருந்து “ஹாலிவுட் படம் மாதிரி இருக்கு” என்ற பாராட்டுகளை கேட்பது படத்திற்கு ஒரு உண்மையான பெரிய வரம். இத்தகைய வலுவான நேர்மறையான பாராட்டுகள் ஒரு புறம் கிடைக்கும்போதும், ஒளிப்பதிவாளர் ஆர்.டி. ராஜசேகர் தன்னிலையில் மிகவும் அமைதியாகவும் இருக்கிறார்.

தனக்கு கிடைக்கும் பாராட்டுகளை குழுவில் உள்ள மற்றவர்களுக்கு கொடுத்து அவர் கூறும்போது, “‘சர்வதேச’ அல்லது ‘ஹாலிவுட்’ போன்ற சொற்கள் கேட்க எனக்கு மகிழ்ச்சி உண்டாகிறது, ஆனால் முழு பாராட்டும் கேமியோ ஃபிலிம்ஸ் தயாரிப்பாளர் சி.ஜே. ஜெயகுமார் அவரகளை தான் சாரும். எங்கள் மீது அவர் வைத்த பெரும் நம்பிக்கை மட்டும் இல்லாவிட்டால், இது சாத்தியமாகி இருக்காது. அவர் ஒரு தயாரிப்பாளராக, படத்தை நல்ல முறையில் கொண்டு வர இரண்டு புறம் பற்றி எரியும் மெழுகுவர்த்தியாக நின்றார். நாங்கள் எடுத்திருக்கும் அதிரடி சண்டைக்காட்சிகள் மிகப்பெரிய பொருட்செலவை கோரின. குறிப்பாக, சைக்கிள் ஸ்டண்ட்க்காக ஹாங்காங்கில் இருந்து ஸ்டண்ட் கலைஞர்கள் மற்றும் சைக்கிள்களை கொண்டுவர மிகப்பெரிய அளவில் செலவானது. ஆனால், ஜெயக்குமார் சார் இந்த விஷயங்கள் படத்துக்கு தேவை என்பதை உணர்ந்து எங்கள் ஐடியாவுக்காக செலவு செய்தார்.

அதர்வா முரளி பற்றி அவர் பாராட்டி பேசும்போது, “எந்த சந்தேகமும் இல்லை! அதர்வா இந்த படத்தில் அழகாகவும், மிகவும் ஸ்டைலாகவும் இருந்தார். படத்தின் மீதான அவரது அர்ப்பணிப்பு முற்றிலும் ஆச்சரியமாக இருக்கிறது” என்றார்.

தனது லென்ஸ் மூலம் நயன்தாராவை படம்பிடித்த அனுபவத்தை அவர் கூறும்போது, “நயன்தாரா வெறும் மேக்கப் மட்டும் அணிந்து கொண்டு லென்ஸ் முன் நிற்கவில்லை. அவர் கேமராவின் மொழியை புரிந்து கொண்டு, அதற்கேற்ப சரியாக தன்னை வெளிப்படுத்துவதிலும், நடிப்பதிலும் நிபுணத்துவம் வாய்ந்தவர். ராஷி கண்ணா திரையில் ஒரு தேவதையாக வந்து, அவருடைய அழகால் மனதை கொள்ளையடிப்பார்” என்றார்.

இறுதியாக, “அவரை பற்றி விவரிக்க சொற்கள் இல்லை! அவர் ஒரு மேதை. நீங்கள் அவரது நடிப்பை பார்த்து பயம் கொள்வீர்கள்” என அனுராக் காஷ்யாப்பின் வில்லத்தனத்தை பற்றி கூறிகிறார்.

ஆகஸ்ட் 30ஆம் தேதி வெளியாகும் இந்த இமைக்கா நொடிகள் படத்தில் ஹிப் ஹாப் ஆதியின் இசையில் வெளியான பாடல்கள் ஏற்கனவே சூப்பர் ஹிட். மேலும் அவரது பின்னணி இசை படத்தின் மிகப்பெரிய ஹைலைட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது