
கேமராவின் மொழியை புரிந்து கொண்டுவர் நயன்தாரா – ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர்
இமைக்கா நொடிகள்' பார்த்தவுடன் எல்லோருடைய மனதிலும் உடனடியாக தாக்குகின்ற ஒரு தீப்பொறி அதன் காட்சியமைப்புகளாக தான் இருக்கும். தலைப்புக்கேற்ற மாதிரியே உண்மையில், அழகான காட்சியமைப்புகளால் கண்களை இமைக்காமல் பார்க்க வைக்கிறது. பொதுமக்களிடமிருந்து இருந்து "ஹாலிவுட் படம் மாதிரி இருக்கு" என்ற பாராட்டுகளை கேட்பது படத்திற்கு ஒரு உண்மையான பெரிய வரம். இத்தகைய வலுவான நேர்மறையான பாராட்டுகள் ஒரு புறம் கிடைக்கும்போதும், ஒளிப்பதிவாளர் ஆர்.டி. ராஜசேகர் தன்னிலையில் மிகவும் அமைதியாகவும் இருக்கிறார்.
தனக்கு கிடைக்கும் பாராட்டுகளை குழுவில் உள்ள மற்றவர்களுக்கு கொடுத்து அவர் கூறும்போது, "'சர்வதேச' அல்லது 'ஹாலிவுட்' போன்ற சொற்கள் கேட்க எனக்கு மகிழ்ச்சி உண்டாகிறது, ஆனால் முழு பாராட்டும் கேமியோ ஃபிலிம்ஸ் தயாரிப்பாளர் சி.ஜே. ஜெயகுமார் அவரகளை தான் சாரும். எங்கள் மீது அவர் வைத்த பெரும் நம்பிக்கை மட்டும் இல்லாவிட்டால்...