Wednesday, April 29
Shadow

நடிகர் ராஜ்கிரண் பிறந்த தினம் இன்று இவரைப்பற்றிய சில varigal

திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளரும் நடிகரும் ஆவார். இவருடைய இயற்பெயர் காதர் என்பதாகும். திரையுலகில் இவருடைய ராஜ்கிரண் என்ற பெயரே மிகப் பிரபலமானது. தமிழில் 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் சில திரைப்படங்களை தயாரித்தும் இயக்கியும் உள்ளார். இவர் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கீழக்கரையில் பிறந்தவர்.

இவர் நிறைய புதுமுக நடிகர்களை அறிமுகம் செய்துள்ளாார். தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் வடிவேலுவை அறிமுகப்படுத்தியவர் இவரே.

இவர் நடித்த திரைப்படங்கள்

என்ன பெத்த ராசா, என் ராசாவின் மனசிலே, அரண்மனைக்கிளி, எல்லாமே என் ராசாதான், மாணிக்கம், பாசமுள்ள பாண்டியரே, பொண்ணு விளையிற பூமி, தலைமுறை, வீரத் தாலாட்டு, நந்தா, பாண்டவர் பூமி, கொஞ்சி பேசலாம், ஜெய், கோவில், சண்டக்கோழி, செவ்வேல், தவமாய் தவமிருந்து, கிரீடம், முனி, தொட்டால் பூ மலரும், காவலன், பொன்னர் சங்கர், வேங்கை, திருத்தணி, மஞ்சப்பை, கொம்பன், சிவப்பு, ரஜினிமுருகன், பா பாண்டி

இவர் இயக்கிய திரைப்படங்கள்

ராசாவே உன்னை நம்பி, என்ன பெத்த ராசா, என் ராசாவின் மனசிலே, அரண்மனைக்கிளி, எல்லாமே என் ராசாதான்