Sunday, September 8
Shadow

Featured

Featured posts

8 வழிச்சாலையை கடுமையாக எதிர்க்கும் மரகதக்காடு இயக்குநர் – மங்களேஷ்வரன்

8 வழிச்சாலையை கடுமையாக எதிர்க்கும் மரகதக்காடு இயக்குநர் – மங்களேஷ்வரன்

Featured, Latest News, Top Highlights
ஆர்.ஆர்.பிலிம்ஸ் சார்பில் ரகுநாதன் தயாரிப்பில் முழுக்க முழுக்க காட்டில் எடுக்கப்பட்டுள்ள படம் ‘மரகதக்காடு'. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் மங்களேஷ்வரன் இயக்கியுள்ளார். அஜய், ராஞ்சனா, ஜெயஸ்ரீ மலையாள இயக்குநர் இலியாஸ் காத்தவன், ஜே.பி.மோகன், ராமச்சந்திரன், பாவா லட்சுமணன் மற்றும் மலைவாழ் மக்கள் பலரும் நடித்துள்ளனர். இவர்கள் தவிர காடும் அருவியும் பிரதான பாத்திரங்களாய் படம் முழுக்க பயணித்துள்ளன. நாகரீகம், நகர விரிவாக்கம் என்கிற பெயரில் ரோடு விரிய விரிய காடு அழிக்கப்படும் அநீதி பற்றி படம் பேசுகிறது. ‘மரகதக்காடு’ படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது காடுகளின் வழியாக பசுமை வழிச்சாலை அமைக்க அரசாங்கம் முழு மூச்சுடன் முனைப்பு காட்டி வருகிறது. இந்த நிலையில் மரகதக்காடு படத்தின் இயக்குநர் மங்களேஸ்வரன் பசுமை வழிச் சாலை மற்றும் இயற்கை அழிப்பு குறித்த...
நல்ல விலைக்கு கைமாறிய விமலின் ‘மன்னர் வகையறா’..!

நல்ல விலைக்கு கைமாறிய விமலின் ‘மன்னர் வகையறா’..!

Featured, Latest News
  விமல் நடிப்பில் அடுத்ததாக வெளிவர தயாராகி வரும் படம் தான் ‘மன்னர் வகையறா’. இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில் இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை நல்ல விலை கொடுத்து சினிமா சிட்டி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அரவிந்த்சாமி - த்ரிஷா நடித்து விரைவில் வெளியாகவுள்ள ‘சதுரங்க வேட்டை-2’ படத்தையும் இந்த நிறுவனம் தான், தமிழகம் முழுக்க வெளியிட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப்படத்தை விமலின் சொந்த நிறுவனமான A3V சினிமாஸ் தயாரித்துள்ளது. காமெடியுடன் கூடிய கமர்ஷியல் படங்களை தருவதில் கைதேர்ந்தவரான இயக்குனர் பூபதி பாண்டியன் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். விமல் ஜோடியாக கயல் ஆனந்தி நடிக்க முக்கிய வேடங்களில் பிரபு, சரண்யா, ரோபோ சங்கர், யோகிபாபு, ஜெயபிரகாஷ், கார்த்திக் (யாரடி நீ மோகினி), சாந்தினி என ஒரு மா...