
சினிமாவில் பிரகாசிக்க என்ன அமைப்பு வேண்டும்?
தியாகராஜ பாகவதர், எம்.ஜி.ஆர், சிவாஜி காலம் முதல் இன்றுவரை பலர் சினிமாதுறையில் இருந்தாலும் ஒரு சிலரே புகழின் உச்சிக்கு செல்ல காரணம் என்ன? சிறப்பான முக அமைப்பு இருந்தும், சரியான நடிப்புத்திறமை இருந்தும் பலரால் அஜித், விஜய் போன்று புகழின் உச்சாணிக்கு செல்ல முடியவில்லையே என்ற வருத்தம் இருக்கத்தான் செய்கிறது. இது போன்றே இசை, டைரக்சன், டான்ஸ், சண்டைப்பயிற்சி, கேமரா போன்ற ஏனைய துறையில் இருப்பவர்களும் எண்ணத் தோன்றும்.
ஆக வெற்றிக்கு திறமை மட்டும் போதாது அதற்கு வேறு சில முக்கியமான விஷயங்களும் தேவையிருக்கிறது என்பது புரிகிறது. அப்படியானால் அந்த வேறு சில விஷயங்கள்தான் என்ன? என்ன அமைப்பு வேண்டும்? அதை நீங்களும் பெற முடியுமா? என்பதை இப்போது பார்ப்போம்.
கல்வி, கலை, எழுத்து, இசை போன்றவைகளுக்கு புதன்கிரகமே காரணம். ஆக கலைத்துறையில் வெற்றி பெற ஒருவரது ஜாதகத்தில் புதன் சிறப்பான இடத்தில் இருக்க வேண்டியது...