Saturday, April 18
Shadow

சினிமாவில் பிரகாசிக்க என்ன அமைப்பு வேண்டும்?

தியாகராஜ பாகவதர், எம்.ஜி.ஆர், சிவாஜி காலம் முதல் இன்றுவரை பலர் சினிமாதுறையில் இருந்தாலும் ஒரு சிலரே புகழின் உச்சிக்கு செல்ல காரணம் என்ன? சிறப்பான முக அமைப்பு இருந்தும், சரியான நடிப்புத்திறமை இருந்தும் பலரால் அஜித், விஜய் போன்று புகழின் உச்சாணிக்கு செல்ல முடியவில்லையே என்ற வருத்தம் இருக்கத்தான் செய்கிறது. இது போன்றே இசை, டைரக்சன், டான்ஸ், சண்டைப்பயிற்சி, கேமரா போன்ற ஏனைய துறையில் இருப்பவர்களும் எண்ணத் தோன்றும்.

ஆக வெற்றிக்கு திறமை மட்டும் போதாது அதற்கு வேறு சில முக்கியமான விஷயங்களும் தேவையிருக்கிறது என்பது புரிகிறது. அப்படியானால் அந்த வேறு சில விஷயங்கள்தான் என்ன? என்ன அமைப்பு வேண்டும்? அதை நீங்களும் பெற முடியுமா? என்பதை இப்போது பார்ப்போம்.

கல்வி, கலை, எழுத்து, இசை போன்றவைகளுக்கு புதன்கிரகமே காரணம். ஆக கலைத்துறையில் வெற்றி பெற ஒருவரது ஜாதகத்தில் புதன் சிறப்பான இடத்தில் இருக்க வேண்டியது அவசியம். புதன் சிறப்பாக அமையாத ஜாதகரால் கலைத்துறையில் இருக்கவே முடியாது. சரி. புதன் சிறப்பாக இருக்கிறது. கலைத்துறைக்கு வந்து விட்டோம். நட்சத்திரமாக ஒளிர முடியவில்லையே? இதற்கு சுக்கிரனின் பங்களிப்பு மிக முக்கியம். இன்று கலைத்துறையில் ஜொலித்துக் கொண்டிருப்பவர்களின் ஜாதகங்களை ஆராய்ந்து பார்த்தீர்களானால் இந்த அமைப்பு நிச்சயம் இருக்கும். இந்த அமைப்பை குரு பார்த்து லாப ஸ்தானத்திலும் அமைந்து விட்டால் கலைத்துறையில் வெற்றி மட்டுமில்லை. மகாலக்ஷ்மியும் உங்கள் வீட்டிலேயே குடியேறி விடுவாள்.

வில்லன் நடிகராக பிரகாசிக்க இந்த அமைப்போடு சூரியன் மற்றும் செவ்வாய் கிரகங்களின் பார்வையோ தொடர்போ இருக்க வேண்டும்.

இன்னும் என்ன? இந்த அமைப்புகள் இருந்தால் நீங்கள் தைரியமாக திரைத்துறையில் முயற்சி செய்யலாம். கோச்சார அமைப்புகளும் சரியாக வரும்போது வெற்றி நிச்சயம்.

ஜோதிடர் கிருஷ்ண வாசுதேவன். Mobile:9789013486

Leave a Reply