
ஜோதிடர் கிருஷ்ண வாசுதேவன்
வழங்கும் நட்சத்திர தின பலன்கள்
ஜோதிட ஆலோசனைக்கு Mobile No.9789013486
Email:krishnavasudevan2810@gmail.com
ஆங்கில தேதி • 01.11.2017
கிழமை • புதன்கிழமை
நட்சத்திரம் • உத்திரட்டாதி 7.41 பிறகு
யோகம் • வ்யாகாத
கரணம் • பவம்/பாலவம்
ராகுகாலம் • 11.52 AM PM to 1.18 PM
எமகண்டம் • 7.32 AM to 8.59 AM
குளிகை • 10.25 AM to 11.52 AM
திதி • துவாதசி
இன்றைய நட்சத்திர பலன்கள்
அஸ்வினி • இனிமையான நாள் என்ற போதிலும் போக்குவரத்தின் போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அனைத்து காரியங்களிலும் நிதானம் தேவை.
பரணி • ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் விளங்கக்கூடிய சிறப்பான நாள். உற்சாகம் துள்ளி குதித்து ஆடும்.
கிருத்திகை • சிறப்பான நாள் என்ற போதிலும் செய்யும் காரியங்களில் கவனமுடனும் சிரத்தையுடனும் இருக்க வேண்டும். பிரச்சினைகளை தவிர்த்தல் நலம்
ரோகிணி • நினைத்த காரியங்கள் சிறப்பாகவும் வெற்றியாகவும் நடக்கக்கூடிய சாதகமான நாள்.
மிருகசீரிடம் • இனிமையான நாளாக இருந்தபோதும் தொழிலில் கவனமாக இருப்பது நல்லது. பொறுமையுடன் இருத்தல் நலம்.
திருவாதிரை • இந்த நாள் இனிய நாள். நினைத்தவை அப்படியே நடக்கும்இது உங்களுடைய நாள். கோயிலுக்கு சென்று வருதல் நன்மை பயக்கும்.
புனர்பூசம் • இந்த நாள் உன்னதமான நாள். மனது உவகை கொள்ளும் வகையில் எல்லாம் இன்று உங்கள் இஷ்டப்படியே நடக்கும். சுப நிகழ்ச்சிகள்பற்றிய பேச்சை துவக்கலாம்.
பூசம் • சிறப்பான நாள். மாற்றங்களும் சலசலப்புமின்றி அமைதியாக விளங்கும். மிக நல்ல நாள்.
ஆயில்யம் • இன்று உங்கள் காட்டில் மழை. பொருளும் பணமும் தாராளமாக புழங்கும் நாள்.
மகம் • நல்ல நாள் என்ற போதிலும் வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்க வேண்டும். இரும்பு உபகரணங்கள் மீதும் கவனம் அவசியம்.
பூரம் • உடல் உபத்திரங்கள் தீர்ந்து ஆரோக்கியமாக விளங்க கூடிய நாள். மனது உற்சாகத்துடன் இருக்கும்.
உத்திரம் • சிறப்பான நாள் என்ற போதிலும் செய்யும் காரியங்களில் கவனமுடனும் சிரத்தையுடனும் இருக்க வேண்டும். பிரச்சினைகளை தவிர்த்தல் நலம்
அஸ்தம் • அருமையான நாள், எல்லா காரியங்களிலும் வெற்றிதான். அப்புறம் என்ன கொண்டாட்டம்தான்.
சித்திரை • நல்ல நாளாக இருந்த போதும் வீண்வம்பு தேடி வரும் நாள். பேச்சில் கவனம் தேவை.
சுவாதி • நினைத்த காரியங்கள் எல்லாம் இனிதே நடக்க இறை வழிபாட்டில் கவனம்செலுத்துங்கள். மகிழ்ச்சிகரமான நாள்.
விஷாகம் • நண்பர்களுடனும் குடும்பத்தாருடனும் கூடி இன்புறும் மகிழ்ச்சிகரமான நாள். திருமணம் போன்ற சுப விஷயங்களுக்கு அஸ்திவாரம் போடும் நாள்.
அனுஷம் • இது உங்களுடைய எண்ணப்படி எல்லா விஷயங்களும் நடக்கக்கூடிய அருமையான நாள்.
கேட்டை • கொடுக்கல் வாங்கல் மற்றும் பண விஷயங்கள் அனைத்திலும் வெற்றி அளிக்கக்கூடிய நாள்.
மூலம் • நல்ல நாளாக இருந்த போதும் வாகனங்களில் செல்லும்போதும் இரும்புபொருட்களை உபயோகிக்கும் போதும் கவனமாக இருக்க வேண்டும்.
பூராடம் • ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் விளங்கக்கூடிய சிறப்பான நாள். உற்சாகம் துள்ளி குதித்து ஆடும்.
உத்திராடம் • நினைத்த காரியங்களில் சிறு தடைகள் இருந்தாலும் இது நல்ல நாளே.
திருவோணம் • தடைகளை தகர்த்தெறிந்து வெற்றி நடைபோடும் இனிய நாள். காலதாமதமான காரியங்கள் வெற்றிபெற வாய்ப்புண்டு.
அவிட்டம் • சிறப்பான நாளாக இருந்தபோதும் அதிகாரிகளிடத்தில் கவனமாக இருந்தால் நல்லதே நடக்கும். அமைதியே சிறப்பு.
சதயம் • உடலும் உள்ளமும் பூரிக்ககூடிய இனிமையான நிகழ்வுகள் நடக்கக்கூடிய இனிமையான நாள். இறை வழிபாடு மேன்மை அளிக்கும்.
பூரட்டாதி • கணவன் மனைவி மற்றும் காதலன் காதலியிடையே அன்புபெருகும் மகிழ்ச்சியான நாள். காதலை வெளிப்படுத்தவும் வெற்றிதான்
உத்திரட்டாதி • உங்களுக்கு உரிய மரியாதையும் கௌரவமும் கிடைக்கக்கூடிய சிறப்பான நாள்.
ரேவதி • தனவரவு ஏற்படப்போகும் லாபகரமான நாள். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.
