இசையமைப்பாளர் ஜிப்ரானின் ‘சென்னை 2 சிங்கப்பூர்’ பயணத்தை கொடி அசைத்து துவங்கி வைத்தார் நடிகர் சூர்யா
சினிமா வரலாற்றில் புதியதொரு சாதனையை படைக்க தயாராகிவிட்டார் 'சென்னை 2 சிங்கப்பூர்' படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான். இவர் இசையமைத்திருக்கும் 'சென்னை 2 சிங்கப்பூர்' படத்தின் ஆறு பாடல்களை சென்னை உட்பட ஆறு நாடுகளில் சாலை வழியே பயணித்து வெளியிட இவர்கள் முடிவு செய்தது நாம் எல்லோருக்கும் தெரியும். அந்த வரலாறு படைக்கும் பயணத்தை இன்று சென்னையில் நடிகர் சூர்யா கொடி அசைத்து ஆர்மபித்து வைத்தார். இந்த பயணத்திற்கு முன்னதாக 'சென்னை 2 சிங்கப்பூர்' படத்தின் டீசரும், ஆறு பாடல்களில் முதல் பாடலான 'வாடி வாடி' என்ற பாடலையும் சென்னை சத்தியம் திரையரங்கில் படக்குழுவினர் விமர்சையாக வெளியிட்டனர். இந்த விழாவில் 'சென்னை 2 சிங்கப்பூர்' படத்தின் தயாரிப்பாளர் கே அனந்தன் (காமிக்புக் பிலிம்ஸ் இந்தியா பிரைவேட் லிமிட்டட்), இயக்குனர் அப்பாஸ் அக்பர், இசையமைப்பாளர் ஜிப்ரான், முன்னணி கதாப்பாத்திரங்கள் கோகுல் ஆனந்த், அஞ்சு குரிய...









