
இன்று தென் இந்திய நடிகர் சங்கம் சார்பில் ஜெயலலிதாவுக்கு இரங்கல் கூட்டம் நடை பெற்றது அதில் கலந்து கொண்டு பேசிய ரஜினிகாந்த் சொன்ன விஷயங்கள்
1996ல் ஜெ. தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்தேன். அவர் மனம் கஷ்டப்பட காரணமாக இருப்தேன்
⚡என் மகள் கல்யாணத்துக்கு தர்ம சங்கடத்துடன் ஜெ.விடம் அப்பாயின்மெண்ட் கேட்டேன். உடனே கிடைத்தது. வரமாட்டார் என்று முடிவெடுத்திருந்தேன்.ஆனால் கழக திருமணம் இருந்தாலும், நான் நிச்சயம் வருவேன் என கூறி கலந்துகொண்டார். அப்படி பட்ட பொன் மனம் கொண்டவர் இப்பொ எங்களுடன் இல்லை…
⚡புரட்சி தலைவி வைரம். ஆண் ஆதிக்க சமூகத்த்ல் அழுத்தப்பட்டு வைரமாக மின்னியுள்ளார். அவர் போனபிறகு கோடானகோடி மக்களின் கண்ணீரால் கோஹினூர் வைரமாக புரட்சி தலைவரின் சமாதி அருகில் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்.
⚡2 வயதில் தந்தை, 22 வயதில் தாயை இழந்தார்..
⚡உடல் நிலை சரியில்லாத நிலையிலும் தேர்தல் பிரச்சாரம் செய்து அதிமுகவை அரியணை ஏற்றியவரை இறைவன் அழைத்துவிட்டார்.
⚡அவர் போல் சோதனைகளை சாதனைகளாக மாற்றியவர் யாரும் இல்லை.
⚡பெரியாத்மா மகாத்மா ஆகிவிட்டது. என்னுடைய கண்ணீர் அஞ்சலி
