பிரபல இயக்குனர் பிரபு சாலமன் கிளாப் போர்டு அடித்து துவக்கி வைக்க ஜெய் ஆகாஷ் நடிக்கும் “சென்னை 2 பாங்காக்” படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது.
சென்னை 2 பாங்காக் படத்தின் துவக்கவிழா சென்னை வடபழனி ஏவி எம் ஸ்டுடியோ வில் நடந்தது. ஜெய் ஆகாஷ் நடிக்கும் இந்த படத்தை ஜீ பிலிம் பேக்டரி சார்பில் K.ஷாஜகான், K.ஆனந்தன் தயாரிக்கிறார்கள்.
ஏ.வி.எம்.ஸ்டுடியோ பிள்ளையார் கோயிலில் பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது. பிரபல இயக்குனர் பிரபு சாலமன் கிளாப் போர்டு அடித்து படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். ஜெய் ஆகாஷ், பவர் ஸ்டார், ஷாம்ஸ்,அஸ்வின் நடித்த காட்சி படமாக்கப்பட்டது.
“நான் எடுக்குற இந்த முயற்சி மிகப்பெரிய வெற்றி அடையணும்” என ஜெய் ஆகாஷ் பேசுவது போலவும், அதற்கு பவர்ஸ்டார், ஷாம்ஸ், அஸ்வின் கூட்டாக ” கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றி அடையும். ஜெய் இனிமே எல்லாம் உனக்கு ஜெயந்தாண்டா” என்று பதில் சொல்வது போன்ற காட்சி முதல் காட்சியாக படமாக்கப்பட்டது.
இந்த காட்சியை இயக்குனர் தியாகராஜ் படமாக்க ஒரே டேக்கில் ஓகே செய்தார் ஜெய் ஆகாஷ்.
இயக்குனர் பிரபு சாலமன், பட நாயகிகள் சோனி சரிஷ்டா, யாழினி, சாம்ஸ், பவர் ஸ்டார் சீனிவாசன், கும்கி அஸ்வின், தினேஷ் மேட்னே, சுமா, பொன்னம்பலம் ,டைமண்ட் பாபு, பட இயக்குனர் தியாகராஜ், இசையமைப்பாளர் U.K.முரளி, கேமராமேன் தேவராஜ், மெட்ரோ மகேஷ், உட்பட பல பிரபலங்கள் பட பூஜையில் கலந்து கொண்டு வாழ்த்தினர். படவிழாவுக்கு வந்தவர்களை தயாரிப்பாளர்கள் K.ஷாஜகான், K.ஆனந்தன் ஆகியோர் வரவேற்றனர்.