
சர்வதேச அளவில் பிரபல தயாரிப்பாளரான அசோக் அமிர்தராஜ்க்கு செவிலியர் ஐரோப்பா மற்றும் வெளிநாட்டு விவகாரங்களுக்கான பிரான்ஸ் அமைச்சர் மதிப்பிற்குரிய ஜீன்-யவீஸ் லீ துரியன் செவாலியர் de L’Ordre des Arts et des Lettres விருது வழங்கி கவுரவித்தார்.
இந்தியாவின் மும்பையில் நாளை நடக்க உள்ள பிரான்ஸ்ரிபப்ளிக் திறன் விழாவில் அசோக் அமிர்தராஜ்க்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது.
பிரான்ஸ் அரசின் மதிப்புமிக்க விருதான செவாலியர் de L’Ordre des Arts et des Lettres விருது, கலை, கலாச்சார மற்றும் இலக்கிய துறையில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு, அவர்களது இந்த துறைகளில் அவர்களது பங்களிப்பை பாராட்டி வழங்கப்படும் விருதாகும். .
இதுகுறித்து பேசிய பிரான்ஸ் நாட்டுக்கான இந்திய தூதர் மதிப்புக்குரிய அலெக்ஸ்சாண்டர் ஜிகிளர், இந்த விருதை அசோக் அமிர்தராஜுக்கு வழங்குவதில் பெருமை கொள்கிறேன். சினிமா துறையில் பிரான்ஸ் மற்றும் இந்தியா இடையேயான உறவுகளை வலுப்பெற செய்துள்ள அவர் இந்த விருது பெற தகுதியானர் என்றார்.

தனக்கு விருது அளிக்கப்படுவது குறித்து அமிர்தராஜ் பேசுகையில், இந்த விருதை பெறுவதில் மிகவும் மிகிழ்ச்சி கொள்கிறேன். எனது சினிமா பயணத்தை சர்வதேச அளவில் அங்கீகாரம் செய்துள்ளதற்காகவும், இந்த விருதுக்காகவும் பிரான்ஸ் அரசு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இந்த விருது மூலம் பிரான்ஸ் மற்றும் இந்தியா இடையேயான உறவுகள் மேலும் வலுப்பெறும் என்று நம்புகிறேன் என்றார்.
அமிர்தராஜ் விருது வென்ற ஹாலிவுட் தயாரிப்பாளர் என்பது மட்டுமின்றி முதல் முறையாக இந்தியாவுக்கான ஐநா நல்லெண்ண தூதராக இருந்துள்ளார். 100-க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்துள்ள இவரது படங்கள் உலகளவில் 2 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டியுள்ளது. இதுமட்டுமின்றி அமிர்தராஜ், ஹைடே பார்க் என்டர்டையின்மென்ட் குழுவின் சேர்மன் மற்றும் சிஇஒவாகவும், நேஷனல் ஜியோகிராபிக் பிலிம் நிறுவனத்தின் முன்னாள் தலைவராகவும் இருந்துள்ளார்.
