
நடிகர் மற்றும் இயக்குனர் சேரன படங்கள் என்றாலே மிகவும் தரமான குடும்பத்தோடு சேர்ந்து பார்க்கும் படங்களாக தான் இருக்கும் கடந்த நான்கு வருடங்களுக்கு பிறகு இயக்குனர் சேரன இயக்கம் படம் திருமணம் (சில திருத்தங்களுடன்) இந்த படத்தில் தம்பி ராமையா மகன் உமாபதி நாயகனாக நடிக்கிறார் அவருக்கு ஜோடியாக புதுமுகம் கவிதா சுரேஷ் நடிக்கிறார் இந்த கேரக்டரில் ராஜு முருகனின் ‘குக்கூ’ பட நாயகி மாளவிகாதான் தேர்வு செய்யப்பட்டிருந்தார். அவரை நேரில் சந்தித்த சேரன் குழந்தைத்தனம் சற்றும் மாறாத மாளவிகா அக்கேரக்டருக்கு பொருந்தாது என முடிவு செய்து திருப்பி அனுப்பிவிட்டார். மற்றும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் மனோபாலா,ஜெயப்ரகாஷ்,சுகன்யா,எம்.எஸ்.பாஸ்கர் இவர்களோடு சேரன முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

சில வாரங்கள் கடந்த நிலையில், அடுத்த நாயகி தேடும் படலத்தில் சேரன் இருந்தபோது, அவரது அலுவலகத்தின் அழைப்பு மணி ஒலிக்க போய்த்திறந்தபோது வாசலில் நின்றுகொண்டிருந்தவர் கவிதா சுரேஷ். சேரன் கதவைத்திறக்க அதிர்ச்சி அடைந்த கவிதா சுரேஷ், தான் அதே அபார்ட்மெண்டில் வசிக்கும் டான்ஸ் மாஸ்டர் ஒருவரைச் சந்திக்க வந்திர்ப்பதாகவும், தவறுதலாக காலிங் பெல்லை அழுத்தி விட்டதாகவும் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார்.
உடனே சேரனுக்கு ‘இவர்தான் இக்கதைக்கு சரியான ஆள்’ என்று மண்டையில் பல்பு எரிய, அதே டான்ஸ் மாஸ்டர் மூலம் கவிதா சுரேஷைத் தேர்வு செய்தாராம். சேரனின் ரசனையை மெச்ச ‘குக்கூ’ மாளவிகாவின் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளோம்.
இந்த படத்தின் முதல் பார்வையை விஜய் சேதுபதி வெளியிட்டார் அதோடு இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சமுத்திரகனி கலந்துகொண்டார்.
