Tuesday, March 21
Shadow

பிரபல நடிகரின் மருமகனுக்கு இன்ஸ்டாகிராமில் தொல்லை கொடுத்த 10 பேர் மீது வழக்கு பதிவு

தெலுங்கு திரையுலகில் சூப்பர்ஸ்டாராக இருந்து வருபவர் நடிகர் சிரஞ்சீவி. இவரது மருமகன் கல்யாண் தேவ். இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சில மர்ம நபர்கள் அவரையும், அவரது குடும்பத்தையும் அவமான படுத்தும் வகையில் கருத்துகளை பதிவு செய்துள்ளனர். இதையடுத்து, தவறான கருத்துகளை பதிவு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கல்யாண் தேவ் போலீசில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் பெயரில் விசாரணை மேற்கொண்ட ஹைதராபத் சைபர் கிரைம் போலீசார், இது தொடர்பாக 10 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

வெளிநாட்டு தொழிலதிபரான கல்யாண், நடிகர் சிரஞ்சீவியின் மகள் ஸ்ரீஜாவை கடந்த 2016ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். இது ஸ்ரீஜாவின் இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீஜா ஏற்கனவே சிரஷ் பரத்வாஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டு கடந்த 2104ம் ஆண்டில் வரதட்சனை கொடுமை செய்வதாக கோரி விவாகரத்து பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.