
கேரளாவை பூர்வீகமாக கொண்ட ஆர்யா, “அறிந்தும் அறியாமலும்” படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு உள்ளம் கேட்குமே, நான் கடவுள், மதராச பட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன், அவன் இவன், வேட்டை உள்பட 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் ரோமியோ என்றும் இவரை அழைப்பார்கள் இவரின் திருவிளையாடலை பார்த்து எல்லறோம் இவருக்கு எப்போது திருமணம் என்று கேட்பார்கள். அதே போல இவர் பழகும் பெண்களுடன் இவரையும் அந்த பெண்ணையும் சேர்த்து உடனே கிசு கிசு வர ஆரம்பித்துவிடும் அப்படியான பட்டியல் அதிகம் இவரின் திருமணம் இப்போ அப்போ என்று தள்ளிப்போனது.
தற்போது மார்க்கெட் அவருக்கு சாதகமாக இல்லை எனவே திருமணத்துக்கு பெண் தேடுகிறேன் என்று கூறினார் அதற்காக ஒரு வீடியோ வெளியிட்டார் அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகியது அதோடு அதற்கான ஒரு வெப்சைட் ஒன்றும் ஆரம்பித்து விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அப்படி விண்ணப்பித்தவர்கள் பல ஆயிரம் இதில் இருந்து குறிப்பிட்ட பெண்களை தேர்வு செய்து கலர்ஸ் சேனல் சுயவராம் நடத்துகின்றனர் இதற்காக ஜெய்ப்பூர் அரண்மனையில் மிக பெரிய செட் அமைத்து அதில் இருந்து பெண் திடும் படலம் நடக்கிறது இதில் தேர்வாகும் பெண்ணை வரும் ஏப்ரல் மாதம் திருமணம் நடக்கும் என்றும் கூறினார் கலர்ஸ் சேனல் தலைமை வர்த்தக அதிகாரி அனுப் சந்திரசேகர்
இந்த நிலையில் சின்னத்திரைக்கு வந்திருக்கிறார் ஆர்யா. தமிழில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள கலர்ஸ் தமிழ் சேனலின் ஸ்டார் அட்ராக்ஷன் ஆர்யா தான். சேனலில் விளம்பர தூதரும் ஆர்யா தான் என்கிறார்கள்.
இந்த சேனலில் இன்று(பிப்., 19) தொடங்கும் “எங்க வீட்டு மாப்பிள்ளை” என்ற நிகழ்ச்சி, சுயம்வரம் பாணியில் ஆர்யாவுக்கு பெண்தேடும் நிகழ்ச்சி என்கிறார்கள். இதில் வெற்றி பெறுகிறவரை ஆர்யா திருமணம் செய்ய இருப்பதாகவும் கூறுகிறார்கள். கலர்ஸ் தமிழ் சேனல் இந்த நிகழ்ச்சியை தனது முத்தாய்ப்பான நட்சத்திர நிகழ்ச்சியாக கருதுகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.இந்த நிகழ்ச்சியை நடிகை சங்கீதா தொகுத்து வழங்குகிறார்.
