Wednesday, November 5
Shadow

நகைசுவை திலகம் நடிகை கோவை சரளா பிறந்த நாள் பதிவு


நகைச்சுவைத் திறன் என்பது எல்லோருக்கும் அமைந்துவிடாது. அதுவும், பெண்களில் நகைச்சுவைத் திறன் மிக்கவராக இருப்பது என்பது சாதாரண விஷயமில்லை. திரையுலகில் பெண்கள் நகைச்சுவை நடிகர்கள் குறைவாகவே உள்ளனர். ‘ஆச்சி’ மனோரமாவிற்கு அடுத்து, அவ்விடத்தை நிறைவு செய்தவர், நடிகை கோவை சரளா அவர்கள். தனது தமிழ்த் திரையுலக வாழ்க்கையில், நடிகையாகவும், முக்கியத் துணைக் கதாபாத்திரங்களிலும், நகைச்சுவையாளினியாகவும் 750க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர், ‘சிறையில் பூத்த சின்ன மலர்’ மற்றும் ‘வில்லு’ படங்களில் பாடகியாகவும், ‘உழைத்து வாழ வேண்டும்’ என்ற படத்தின் தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார். சிறந்த நகைச்சுவை நடிகருக்கான ‘தமிழ்நாடு மாநில திரைப்பட விருதையும்’, ‘பூவெல்லாம் உன் வாசம்’ (2001) மற்றும் ‘ஒரி நீ பிரேம பங்கரம் கனு’ (2003) என்ற படங்களில் சிறந்த பெண் நகைச்சுவை நடிகைக்கான ‘நந்தி விருதையும்’ வென்றுள்ள அவர், ஒரு நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் தொலைக்காட்சியில் வளம் வருகிறார். அவரது ’என்ன இங்க சத்தம்’, ‘என்னை ஜப்பான்ல கூப்பிட்டாகோ’, ’சிநேகிதனய்ய் சிநேகிதனய்ய் ர்ர்ரகசிய சிநேகிதனய்ய்’, ‘தொறை இங்க்லீஸ் எல்லாம் பேசுது’ போன்ற நகைச்சுவைக் காட்சிகளை எப்போது பார்த்தாலும் அனைவருக்கும் சிரிப்பு வரும். அத்தகைய திறமைமிக்க நகைச்சுவையாளினியாக விளங்கும் நடிகை கோவை சரளா-விடம் ஒரு முறை பேச்சுக் கொடுத்த போது, ‘ “அஞ்சு வயசுலேயே, ‘எப்படியாச்சும் என்னை சினிமாவில் சேர்த்துவிடுங்க’னு வீட்டில் அடம்பிடிப்பேன். எனக்கு நாலு அக்கா, ஓர் அண்ணன். வீட்டின் கடைக்குட்டி நான். அப்பா மிலிட்டரி ஆபீஸர். காலையில் அஞ்சரை மணிக்கு மேலே தூங்கிட்டிருந்தா, அப்பாவின் பெல்டுதான் பேசும். ‘படிக்கிறேன்’னு புத்தகத்தோடு கிச்சனுக்குப் போய் தூங்குவேன். ஒன்பது வயசில் ‘வெள்ளி ரதம்’ படத்தில் நடிச்சேன். பிளஸ் டூ முடிச்சதும் படிப்புக்கு டூ விட்டுட்டேன். கோயம்பத்தூரிலிருந்தே மேடை நாடகங்கள், ‘முந்தானை முடிச்சு’ உள்ளிட்ட சில படங்களில் நடிச்சுட்டிருந்தேன். வாய்ப்புகள் அவ்வளவு சுலபத்தில் வந்துடலை. வெறும் சரளாவா இருந்தால் முடியாதுன்னு, சென்னைக்கு வந்து ஒவ்வொரு சினிமா கம்பெனியா ஏறி இறங்கினேன். ‘சின்னவீடு, ‘ஆத்தோர ஆத்தா’, ‘வைதேகி காத்திருந்தாள்’ எனக் கொஞ்சம் கொஞ்சமா ஆரம்பிச்சது. 1980 இறுதியில் எக்கச்சக்க படங்களில் நடிக்க ஆரம்பிச்சேன்.” ஆனா சில பேர் தொடர்ந்து காமெடி வாய்ப்புகள் மட்டுமே வருதே எனக் கவலைப்பட்டிருக்கீங்களா? கேட்டப் போது
இப்போவரை இந்த ரோல்தான் வேணும்னு எந்த எதிர்பார்ப்பும் இல்லை. என்னை நம்பிக் கொடுக்கும் கேரக்டரில் என் பெஸ்டை காண்பிக்கிறேன். அது மக்களுக்கும் ரொம்பப் பிடிக்குது. மக்கள்தானே நடுவர்கள். அதனால், தொடர்ந்து எனக்கு வரும் காமெடி ரோலில் சிறப்பாக நடிச்சுட்டிருக்கேன். ‘சதி லீலாவதி’, ‘விரலுக்கேத்த வீக்கம்’, ‘காலம் மாறிப்போச்சு’ உள்ளிட்ட பல படங்களில் ஒன் ஆஃப் தி ஹீரோயினாவும் நடிச்சிருக்கேன். ஒரே மாதிரி டயலாக் பேசாமல், ‘ஏனுங்க மாமோய்’, ‘ஏன்டா ராகவா’னு புதுசு புதுசா வாய்ஸ் மாடுலேஷனோடு டயலாக் பேசுறேன். சமீபமாக, காமெடியுடன் நிறைய சென்டிமென்ட் ரோலிலும் நடிக்கிறது திருப்தியா இருக்கு.” அப்ப்டீன்னு சொன்னவருக்கு ஹாப்ப்பி பர்த் டே சொல்வதில் ஆந்தை சினிமா அப்டேட் குழு மகிழ்ச்சிக் கொள்கிறது