
நடிகர் சதீஷ் சிவகார்த்திகேயன் நண்பர் அவருடன் தான் சினிமாவில் நுழைந்தார் இன்று வளரும் காமெடியன் பட்டியலில் முதலில் இருப்பவர் அதுநாள் தான் என்னவோ இப்பவே கண்டிஷன் போட ஆரம்பித்துள்ளார் போல இருக்கு சின்ன படங்கள் ஹீரோகள் என்றால் கண்டிஷன் பட்டியல் நீளுகிறதம் ஆரம்பமே இப்படியா ஹ்ம்ம் இன்னும் என்ன நடக்குமோ .
ஆரம்பத்தில் வளர்ந்து வரும் நடிகர்களின் படங்களில் மட்டுமே தலைகாட்டி வந்த சதீஷ்க்கு வரிசையாக படங்கள் ஹிட்டாவதால் பெரிய நடிகர்களின் படங்களில் நடிக்க வாய்ப்புகள் தேடி வந்தவண்ணம் இருக்கிறது. தற்போது முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வரும் காமெடி நடிகர் சதீஷ், அந்த மாதிரி படங்களுக்கே முக்கியத்துவம் கொடுத்து வருகிறாராம்.
பிரபலமில்லாத நடிகர்களின் படங்கள் இவரை தேடி வந்தால் அந்த படங்களை அவர் உடனடியாக ஏற்பது கிடையாதாம். அந்த படங்களுக்கு எத்தனை நாட்கள் கால்ஷிட் தேவைப்படுமென்று கேட்டறிந்துவிட்டு, அவர்கள் கேட்கும் நாட்களில் இவருடைய கால்ஷீட் இருந்தால் மட்டுமே ஒப்புக் கொள்கிறாராம்.
இதற்கும் மேலாக, இவர் அப்படி ஒப்புக் கொள்ளும் படங்களில் நடித்துக் கொண்டிருக்குமபோது பெரிய நடிகர்களின் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தால் அங்கு போய்விடுவதாகவும், அந்த படத்தை முடித்துக் கொடுத்துவிட்டுதான் இவர்கள் படத்துக்கு திரும்புவேன் என்பதுபோலவும் கண்டிசன் போடுகிறாராம். இதனால், இவரை புக் செய்யவரும் பல தயாரிப்பாளர்கள் தற்போது வேறொரு காமெடி நடிகரை தேடி ஓடுகிறார்களாம்.
