Tuesday, October 8
Shadow

“தேவி” இசையில் வெளியீட்டில் தமன்னா கண்ணீர்

பாராட்டுக்காக ஏங்கும் குணம் சாதாரண மக்களிடம் மட்டுமல்ல, நட்சத்திரங்களுக்கும் உண்டு. சிலரால் அந்தப் பாராட்டைத் தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு ஆனந்தமாக இருக்கும். அப்படி ஒரு ஆனந்தத்தில் கண்ணீர் மழையுடன் நேற்று தமன்னா அமர்ந்திருந்தார். விஜய் இயக்கத்தில் பிரபுதேவா ஜோடியாக மூன்று மொழிகளில் தயாராகியுள்ள படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது.

அப்போது பிரபுதேவா தமன்னாவைப் பற்றி பாராட்டிப் பேசும்போதுதான் அப்படி ஒரு நெகிழ்ச்சியான சம்பவம். பிரபுதேவா பேசும் போது, “தமன்னா என்னை பிளைட்லதான் சந்திச்சத பத்தி சொன்னாங்க. ஒரு முறை பிளைட்ல போகும் போது, ஒரு ஃபாரீன் பொண்ணு என்னைப் பார்த்து கையாட்டினாங்க. நான் பக்கத்துல இருந்த என் பிரன்ட் கிட்ட, பாருடா எனக்கு பாரீன்லலாம் ரசிகைகள் இருக்காங்கன்னு சொன்னேன், அதுக்கு அவன் டேய், அது தமன்னாடான்னு சொன்னான். அப்படிப்பட்ட ஒரு பாரீன் பெண்ணை இந்த தேவி படத்துல கிராமத்துப் பெண்ணா நடிக்க வச்சிருக்காரு இயக்குனர் விஜய்.

நானும் அவர் கிட்ட சொல்றதுக்கு நல்லா இருக்கும், இதெல்லாம் நடக்கிற காரியமா சார்னு சொன்னேன். இல்லை பண்ணலாம்னு சொன்னாரு, சரி எல்லாரும் சொல்றதுதானே, என்ன பண்றாங்கன்னு பார்க்கலாம்னு விட்டுட்டேன், நம்பவுமில்லை. டி-கிளாமரைஸ் கதாபாத்திரம்னு எல்லாரும் சொல்றாங்க, அப்படி அல்ல அது. வில்லேஜ் பொண்ணுங்கதான் ரொம்ப அழகு. அந்த வில்லேஜ் பொண்ணா படத்துல ரொம்ப அழகா இருந்தாங்க தமன்னா.அவ்வளவு இன்வால்வ்மென்ட்டோட நடிச்சாங்க.

ஒரு நாள் கேரவன்ல உட்கார்ந்து அழுதுட்டு வேற இருந்தாங்க, அவ்வளவு பிரஷர், மூணு மொழிகள்லயும் அவங்க பேசி நடிக்கணும். இயக்குனர் விஜய்கிட்ட கேள்வி கேட்டு, கேள்வி கேட்டு அந்தக் கதாபாத்திரத்தை எப்படி சிறப்பா செய்ய முடியும்னு யோசிச்சிக்கிட்டே இருப்பாங்க.அப்புறம், இந்தப் படத்துல ஒரு பாட்டுக்கு அவங்க ஆடிய டான்ஸ் அவ்வளவு சிறப்பா இருக்கும். 20 நாள் அதுக்கு ரிகர்சல் பார்த்தோம்.

ஆனால், இரண்டு நாள் வந்துட்டு மூணாவது நாள் அவங்க வரலை. போன் பண்ணால், மாஸ்டர் கால் வலிக்குதுன்னு சொன்னாங்க, அப்புறம் கை வலி, முதுகு வலி இன்னைக்கு ஒரு நாள் என்னை விட்டுடங்கன்னு கேட்டாங்க. ஆனால், அப்புறம் 15 நாள் ரிகர்சல் வந்து அந்தப் பாட்டுல நடிச்சாங்க. அதுக்கு காரணம் எல்லாமே தமன்னாதான்,” என பாராட்டித் தள்ளினார்.

Leave a Reply