Tuesday, August 4
Shadow

தனுஷ் மற்றும் சூர்யா நடித்த பிரமாண்ட படங்கள் OTTயில் ரிலிஸ் திட்டம்


தனுஷ் நடிச்ச .ஜகமே தந்திரம்’ தியேட்டருக்குதான் எனப்பேசப்பட்டு வந்த நிலையில் தயாரிப்பாளருக்குக் கடன் சுமை அதிகரித்துக்கொண்டே போவதால் இப்போது OTT முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகச் சொல்லிப்புட்டாய்ங்க.. ஆமாங்க இந்த படத்தை நெட்ஃபிளிக்ஸ் வாங்கயிருக்கிறது. இதற்கிடையே அக்டோபரில் தியேட்டர்கள் திறக்க வாய்ப்பிருப்பதாகச் சிலர் நம்புவதால் ஜூலை இறுதிவரைப் பொறுத்திருந்து முடிவெடுக்கலாம் என்கிற பேச்சும் ஆகஸ்டில் ஆன்லைன் ரிலீஸ் கன்ஃபார்முன்னும் நியூஸ் வருது .

இந்த நேரடி OTT ரிலீஸ் வழக்கத்தைத் தொடங்கிவைத்த சூர்யாவின் 2டி நிறுவனம் அடுத்த ரிலீஸுக்குக் காத்திருக்கிறது. சூர்யா நடிப்பில் தயாராகியிருக்கும் ‘சூரரைப் போற்று’ படம் டிசம்பர் வரை தியேட்டர்கள் திறக்காது என்கிறபட்சத்தில் OTT-யில் ரிலீஸ் செய்யலாம் அப்ப்டீங்கற யோசனை வந்துடுச்சாம்

இப்படி பிரமாண்ட நடிகர்கள் படங்கள் OTTயில் வெளியானால் தமிழ் சினிமாவின் நிலமை கேள்விகுறியாகும் நிலமை தான் எற்படும்.