Monday, June 8
Shadow

தளபதி விஜயை வீழ்த்திய தனுஷ், சூர்யா – எப்படி?

தமிழ் திரைஉலகில் ரஜினிக்கு அடுத்ததாக வசூல் மன்னர்களாக விளங்கி வருபவர்கள் விஜயும் அஜித்தும் தான். இவர்களது படங்களுக்கு எப்போதும் நல்ல வரவேற்பு நிலவி வருவது வழக்கம் தான்.

10 வருடங்களுக்கு முன்பு இதே நாளில் தான் விஜய் முதல் முதலாக இரட்டை வேடத்தில் நடித்திருந்த படமான அழகிய தமிழ் மகன் படம் வெளியானது, அதே நேரத்தில் ஹரி இயக்கத்தில் சூர்யாவின் வேல் மற்றும் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷின் பொல்லாதவன் படமும் வெளியானது.

ஆரம்பத்தில் விஜயின் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தாலும் இறுதியில் படம் தோல்வியை தழுவியது, சூர்யாவின் வேல் படம் கமர்சியல் ரீதியாக நல்ல வசூலையும் தனுஷின் பொல்லாதவன் படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply