
தமிழ் சினிமாவில் கமல்ஹாசன் பிறகு சகலாகலாவல்லவன் என்று சொல்லும் அளவுக்கு தற்போது உள்ள நடிகர்களில் தனுஷ் மட்டும் தான் பொருந்துவார் என்று சொல்லலாம் காரணம் சினிமாவில் உள்ள அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குபர் இவர் இவரின் இயக்கத்தில் மிக பிரமாண்ட முறையில் இரண்டு மொழிகளில் தயாராகும் படத்தை பிரமாண்ட தயாரிப்பு நிறுவனம் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்குது இதன் படத்தின் பூஜையுடன் படபிடிப்பு நேற்று மிகவும் அமைதியாக ஆரம்பமானது
‘பவர் பாண்டி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான தனுஷ், அடுத்ததாக நடிப்பில் கவனம் செலுத்தினார். கெளதம் மேனன் இயக்கத்தில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’, பாலாஜி மோகன் இயக்கத்தில் ‘மாரி 2’, வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வடசென்னை’ மற்றும் ‘த எக்ஸார்டினரி ஜர்னி ஆஃப் த பஹிர்’ ஆகிய படங்களில் நடித்தார்.
இதில், ‘த எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் த பஹிர்’ படம் ரிலீஸாகிவிட்டது. மற்ற மூன்று படங்களும் ரிலீஸுக்குத் தயாராக இருக்கின்றன. இந்நிலையில், தன்னுடைய அடுத்த படத்தின் ஷூட்டிங்கை இன்று பூஜையுடன் தொடங்கியிருக்கிறார் தனுஷ்.
‘பவர் பாண்டி’ படம் ரிலீஸானபோதே அடுத்ததாக ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் ஒரு படத்தை இயக்கப் போவதாகவும், ‘பாகுபலி’ போல வரலாற்றுப் படமாக அது இருக்கும் என்றும் செய்திகள் வெளியாகின. ஆனால், ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் பைனான்ஸ் பிரச்சினையில் இருப்பதால், படம் திட்டமிட்டபடி தொடங்காது என்றும் கூறப்பட்டது.

ஆனால், ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் தான் தனுஷின் இரண்டாவது படத்தைத் தயாரிக்கிறது என்பது உறுதியாகி விட்டது. ‘பவர் பாண்டி’ படத்தில் இயக்கத்தில் கவனம் செலுத்தி, ராஜ்கிரணின் சின்ன வயது வேடத்தில் மட்டுமே நடித்த தனுஷ், இரண்டாவது படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.
மேலும், நாகர்ஜுனா, அதிதி ராவ், சரத்குமார், எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீகாந்த் ஆகியோரும் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு, ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். கலை இயக்குநராக முத்துராஜ் பணியாற்றுகிறார்.
