Tuesday, April 28
Shadow

தனுஷ் இயக்கும் படத்தின் பெயர் என்ன தெரியுமா?

நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் எனப் பன்முகம் கொண்ட தனுஷ், ‘ப.பாண்டி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதில் ராஜ்கிரண், ரேவதி, பிரசன்னா, சாயா சிங், மடோனா செபஸ்டியன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

இதன் பிறகு நடிப்பில் கவனம் செலுத்தி வந்த தனுஷ், அடுத்ததாக புதிய படம் ஒன்றைய இயக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. மேலும் அதில் தனுஷே நடிக்க இருப்பதாகவும் தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், தனுஷ் இயக்க இருக்கும் படத்திற்கு ‘நான் ருத்ரன்’ என்று தலைப்பு வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 400 ஆண்டுகளுக்கு முன்பு நிகழும் கதையை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக இருக்கிறதாம்.

இந்த படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனம் மூலம் தயாரிக்க முடிவு செய்திருக்கிறார். விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.