Monday, October 7
Shadow

Tag: dhanush

அசுரனில் இரட்டை வேடத்தில் நடிக்கும் தனுஷ்

அசுரனில் இரட்டை வேடத்தில் நடிக்கும் தனுஷ்

Latest News, Top Highlights
அசுரன் படத்தில் தனுஷுக்கு அப்பா, மகன் என்று இரட்டை வேடங்கங்களில் நடித்துள்ளார். 60கள் மற்றும் 80-களில் நடக்கும் கதையில் நடிகர் தனுஸ் 45 வயசு கிராமத்தை சேர்ந்த நபராக நடித்துள்ளார். பூமணியின் ‘வெக்கை’ நாவலை அடிபடையாக கொண்ட இந்த படத்தில் மஞ்சுவாரியர், பசுபதி முதல் பாலாஜி, கருணாசின் மகன் கேன் மற்றும் பவன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். தயாரிப்பாளர் தாணுவின் வி கிரியேசன் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிவி பிராகஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கப்படும் என்று இயக்குனர் வெற்றிமாறன் உறுதி செய்துள்ளார். இது வடசென்னையின் இரண்டாம் பாகமாக இருக்கும் என்பதுடன், தற்போது ப்ரீ புரோடைக்சன் பணிகள் தொடங்கப்பட்டு விட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த படத்தின் பெரும்பாலான ஷூட்டிங்கை முடித்து கொடுத்து விட்ட நடிகர் தனுஷ், தற்போது 'கொடி' புகழ் ஆர் எஸ் துரை செந்தில்குமாரின் பெ...
புத்தி தெளிந்த தனுஷ்! மீண்டும் பழைய கூட்டனியோடு?

புத்தி தெளிந்த தனுஷ்! மீண்டும் பழைய கூட்டனியோடு?

Latest News
நக்கல்,கிண்டல்,அவமானம்,கிசு கிசு என தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் அடிவாங்காத இடமே இல்லை என்று சொல்லலாம்!! இன்றைய அளவிலும் அவரது உடல்வாகை வைத்து கிண்டல் செய்வதை நாம் தினசரி கேட்கலாம் பார்க்கலாம்..! எதையும் காதில் போட்டுக்கொள்ளாமல் அவரும் வெற்றி பாதையில் முன்னேறி கொண்டு தான் இருக்கிறார்!!! அவர் மீது உள்ள விமர்சனங்களில் ஒன்று தனது உயிர் நண்பர்களின் வளர்ச்சியை பொருத்துக்கொள்ளாதவர் என்பது ஒன்று அது எந்த அளவிற்கு உண்மையோ நமக்கு தெரியாது ஆனால் அதுபோன்ற நண்பர்களிடத்தில் சண்டை போட்டுக்கொண்டு உறவாடுவதை நிறுத்திக்கொள்கிறார் அந்தவகையில் யுவன் தொடங்கி ஜி வி சிவா மற்றும் அனிருத் என லிஸ்ட் பெரிசா போகும் இப்போ என்ன வென்றால் சமீப காலமாக பழைய கூட்டணிகளோடு மீண்டும் புதுக்கூட்டணி போடுகிறார் அந்த வகையில் மாரி 2 வில் யுவனோடும் அதனை தொடர்ந்து தனுஷ் வெற்றி கூட்டணியில் உருவாக போகும் அசுரன் படத்திற்கு ஜ...
தன் அடுத்த படத்தின் இயக்கத்துக்கு மும்முரம் காட்டும் தனுஷ்

தன் அடுத்த படத்தின் இயக்கத்துக்கு மும்முரம் காட்டும் தனுஷ்

Latest News, Top Highlights
நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் எனப் பல திறமைகளுக்குச் சொந்தக்காரரான தனுஷ்,தமிழ் சினிமாவின் சகலாகலவல்லவன் என்று சொல்லும் அளவுக்கு தன்னை உயர்த்தி வருகிறார் ‘பவர் பாண்டி’ படத்தின் மூலம் இயக்குநர் ஆனார். ராஜ்கிரண், ரேவதி, பிரசன்னா, சாயா சிங் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்தனர். இயக்குநராகவும் தனுஷுக்கு மிக பெரிய வெற்றியைக் கொடுத்தது இந்தப் படம். அதோடு நல்ல விமர்சனங்களையும் கொடுத்து ஒரு சிறந்த இயக்குனர் என்று பெயர் வாங்கி கொடுத்தது. ராஜ்கிரணின் சின்ன வயது வேடத்தில் தனுஷும், ரேவதியின் சின்ன வயது வேடத்தில் மடோனா செபாஸ்டியனும் நடித்தனர். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, ஷான் ரோல்டன் இசையமைத்தார். தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் இந்தப் படத்தைத் தயாரித்தது. ‘பவர் பாண்டி’யைத் தொடர்ந்து வரலாற்றுப் படமொன்றைத் தனுஷ் இயக்கப் போவதாகவும், ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் அதைத் தயாரிப்பதாகவும் செய்திகள் வ...
கேன்ஸ் பட விழா தனுஷ் பங்கேற்ற விழா ஆரம்பித்ததும் வெளிநடப்பு செய்த மக்கள்

கேன்ஸ் பட விழா தனுஷ் பங்கேற்ற விழா ஆரம்பித்ததும் வெளிநடப்பு செய்த மக்கள்

Latest News, Top Highlights
கேன்ஸ் திரைப்பட விழா பிரான்ஸில் உள்ள கேன்ஸ் நகரில் நடந்து கொண்டிருக்கிறது. பாலிவுட் நடிகைகள் ஐஸ்வர்யா ராய், சோனம் கபூர், ஹூமா குரேஷி, மல்லிகா ஷெராவத், நடிகர் தனுஷ் உள்ளிட்ட இந்திய பிரபலங்கள் இந்த திரைப்பட விழாவில் கலந்து கொண்டுள்ளனர். இந்த விழாவில் லார்ஸ் வோன் ட்ரையர் இயக்கிய சீரியல் கில்லர் படமான தி ஹவுஸ் தட் ஜாக் பில்ட் திரையிடப்பட்டது. திங்கட்கிழமை இரவு திரையிடப்பட்ட தி ஹவுஸ் தட் ஜாக் பில்ட் படம் துவங்கிய சில நிமிடங்களிலேயே 100 பிரபலங்கள் அரங்கில் இருந்து வெளியே சென்றுவிட்டனர் தொடர் கொலை செய்யும் ஜாக் என்ற கதாபாத்திரத்தில் மேட் தில்லன் நடித்துள்ளார். அவர் 2 குழந்தைகளின் தலையில் சுட்டுக் கொன்ற காட்சியை பார்த்ததுமே 100 பிரபலங்கள் அரங்கில் இருந்து நடையை கட்டிவிட்டனர். சின்ன குழந்தைகள், பெண்களை ஈவு இரக்கமே இல்லாமல் கொன்று அவர்களின் உடல்களை சிதைப்பதை காட்டும் இது எல்லாம் ஒரு படமா...
தனுஷ் இயக்கும் படத்தின் பெயர் என்ன தெரியுமா?

தனுஷ் இயக்கும் படத்தின் பெயர் என்ன தெரியுமா?

Latest News, Top Highlights
நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் எனப் பன்முகம் கொண்ட தனுஷ், ‘ப.பாண்டி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதில் ராஜ்கிரண், ரேவதி, பிரசன்னா, சாயா சிங், மடோனா செபஸ்டியன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதன் பிறகு நடிப்பில் கவனம் செலுத்தி வந்த தனுஷ், அடுத்ததாக புதிய படம் ஒன்றைய இயக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. மேலும் அதில் தனுஷே நடிக்க இருப்பதாகவும் தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், தனுஷ் இயக்க இருக்கும் படத்திற்கு ‘நான் ருத்ரன்’ என்று தலைப்பு வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 400 ஆண்டுகளுக்கு முன்பு நிகழும் கதையை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக இருக்கிறதாம். இந்த படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனம் மூலம் தயாரிக்க முடிவு செய்திருக்கிறார். விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ...
ஒரேநாளில் ரஜினிக்கு மகிழ்ச்சி அளித்த மூன்று விஷயங்கள்

ஒரேநாளில் ரஜினிக்கு மகிழ்ச்சி அளித்த மூன்று விஷயங்கள்

Latest News, Top Highlights
ரஜினி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘காலா’. பா.இரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். இப்படத்தின் டீசர் நள்ளிரவு வெளியானது. இந்த டீசருக்கு ஏகோபித்த வரவேற்பு பெற்று வருகிறது. மேலும் பல சாதனைகளையும் படைத்து வருகிறது. டீசர் வெளியான மகிழ்ச்சியில் இருக்கும் ரஜினிக்கு மற்றொரு மகிழ்வான நிகழ்ச்சியும் நடைபெற்றிருக்கிறது. இன்று இந்தியா முழுவதும் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில் சவுகார் பேட்டை, புரசைவாக்கம் உள்ளிட்ட இடங்களில் ஹோலிப் பண்டிகையை மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், ரஜினி தனது வீட்டில் ஹோலிப் பண்டிகையை கொண்டாடி இருக்கிறார். ஹோலி கொண்டாடிய புகைப்படத்தை ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த், தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். மேலும் இன்று ரஜினியின் மனைவி, லதா ரஜினிகாந்த்த...
நாளை ரஜினி ரசிகர்களுக்கு செம ட்ரீட் காத்திருக்கு!

நாளை ரஜினி ரசிகர்களுக்கு செம ட்ரீட் காத்திருக்கு!

Latest News, Top Highlights
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘காலா’. தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தை பா.இரஞ்சித் இயக்கியிருக்கிறார். இந்த படத்தின் டீசர் இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு பின்னர் நாளை தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஜத்குரு பூஜயஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்யாவின் மறைவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ‘காலா’ டீசர் தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நலையில், ஏற்கனவே ‘காலா’ டீசரை காண அதீத ஆவலுடன் இருக்கும் ரசிகர்கள், நாளை வெளியாகும் டீசரை காணும் உற்சாகத்தில் இருக்கின்றனர். கடந்த ஒரு வாரமாக காலா டீசர் டிரெண்டாகி வருகிறது. இந்நிலையில், நாளை டீசர் வெளியாகி யூடியூப்பில் இதுவரை படைத்த சாதனைகளை முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காலா படத்தில் ரஜினி மும்பை கேங்ஸ்டராக வருகிறார். ‘இந்த கரிகாலனோட முழு ரவுடித்தனத்த பாத்தது இல்ல...
தனுஷுடன் இணைந்து நடிக்கும் சூப்பர் ஸ்டார்

தனுஷுடன் இணைந்து நடிக்கும் சூப்பர் ஸ்டார்

Latest News, Top Highlights
தனுஷ் நடிப்பில் தற்போது ‘மாரி 2’ உருவாகி வருகிறது. பாலாஜி மோகன் இயக்கி வரும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தென்காசியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை அடுத்து ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ள புதிய படத்தை தனுஷே இயக்கி, நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ளது. இதற்கான முதற்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் தனுஷுடன், நாகார்ஜுனாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. "முதலில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும், அவரால் நடிக்க முடியாததால், தெலுங்கில் மற்றொரு சூப்பர் ஸ்டாரான நாகார்ஜுனாவை நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளிய...
இது என்னடா ரஜினிக்கு வந்த சோதனை – ரசிகர்கள் வருத்தம்

இது என்னடா ரஜினிக்கு வந்த சோதனை – ரசிகர்கள் வருத்தம்

Latest News, Top Highlights
ரஜினி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘காலா’. பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தை தனுஷ், தனது வுண்டர்பார் நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் ரஜினி, தனுஷின் வொண்டர்பார் நிறுவனம், இயக்குனர் பா.இரஞ்சித் ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. காலா என்ற கரிகாலன் படத்துக்கான கதை மற்றும் தலைப்பு தன்னுடையது என்றும், இந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜசேகரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். 1996ம் ஆண்டு கரிகாலன் என்ற தலைப்பை தான் பதிவு செய்து வைத்திருப்பதாகவும், அனுமதில்லாமல் ‘காலா என்கிற கரிகாலன்’ என்ற தலைப்பில் படம் தயாரித்திருப்பதாகவும் வழக்கு தொடர்ந்திருக்கிறார். இந்த வழக்கை விசாரித்த நீதிம...
தனது அடுத்த படத்தின் முக்கிய தகவலை வெளியிட்ட தனுஷ்

தனது அடுத்த படத்தின் முக்கிய தகவலை வெளியிட்ட தனுஷ்

Latest News, Top Highlights
`வடசென்னை', `எனை நோக்கி பாயும் தோட்டா' படங்களின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், `மாரி-2' படத்தின் படப்பிடிப்பும் இன்று துவங்கியிருப்பதாக தனுஷ் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகும் `மாரி-2' படத்தில் தனுஷ் ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். கிருஷ்ணாவும், வரலட்சுமி சரத்குமாரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். வில்லனாக மலையாள நடிகர் டோவினோ தாமஸ் நடிக்கிறார். தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்திற்கான பூஜை கடந்த டிசம்பர் 14-ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. சமீபத்தில் இந்த படத்தில் ஒரு பாடலை இளையராஜா பாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியிருக்கிறது....