Wednesday, October 28
Shadow

இயக்குனர், தயாரிப்பாளர், கதாசிரியர், வசனகர்த்தா மற்றும் நடிகர் விசு பிறந்த நாள்

′
கடந்த  1941-ம் ஆண்டு பிறந்த இவர் திரைப்படம் தவிர்த்து மேடை நாடகம், தொலைக்காட்சித் தொடர் பலவற்றிலும் நடித்துள்ளார். நடிகர் கிஷ்மு இவரது சகோதரர் ஆவார். இவர் இயக்கிய சம்சாரம் அது மின்சாரம் திரைப்படம் பெரும்பாலான இந்திய மொழிகளில் மீண்டும் எடுக்கப்பட்டுள்ளது  இத்திரைப்படம் 1986-ம் ஆண்டிற்கான சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான பிலிம் பேர் விருதை பெற்றுள்ளது. தமிழின் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவரான கே. பாலச்சந்தரிடம் உதவி இயக்குனராக இருந்து பின்னர் இயக்குனரானார். இவருடைய பெரும்பாலான திரைப்படங்கள் சமூக, குடும்பத் திரைப்பட வகையைச் சேர்ந்ததாகும்.
சன் தொலைக்காட்சியில் அரட்டை அரங்கம் என்கிற பெயரில் ஒரு பேச்சு நிகழ்ச்சியை நடத்தினார். பின்னர் அதிலிருந்து விலகி ஜெயா தொலைக்காட்சியில் மக்கள் அரங்கம் என்கிற பெயரில் ஒரு பேச்சு நிகழ்ச்சியை நடத்திவருகிறார்.
இவர் நடித்த தமிழ் திரைப்படங்கள்
மணல் கயிறு 2, எல்லாம் அவன் செயல், தித்திக்குதே, சிகாமணி ரமாமணி, மிடில் கிளாஸ் மாதவன், தில்லு முல்லு, குடும்பம் ஒரு கதம்பம், கண்மணி பூங்கா, மணல் கயிறு, டௌரி கல்யாணம், புயல் கடந்த பூமி, ராஜதந்திரம், வாய்ச்சொல்லில் வீரனடி, நாணயம் இல்லாத நாணயம், அவள் சுமங்கலிதான், புதிய சகாப்தம், கெட்டிமேளம், சிதம்பர ரகசியம், ஊமை விழிகள், மிஸ்டர். பாரத், மெல்லத் திறந்தது கதவு, சம்சாரம் அது மின்சாரம், திருமதி ஒரு வெகுமதி, பெண்மணி அவள் கண்மணி, வீடு மனைவி மக்கள், மாப்பிள்ளை சார், வேடிக்கை என் வாடிக்கை, மன்னன், உரிமை ஊஞ்சலாடுது, உழைப்பாளி, சின்ன மாப்ளே, பட்டுக்கோட்டை பெரியப்பா, வனஜா கிரிஜா. நேசம், அரவிந்தன், அடிமைச் சங்கிலி, அருணாச்சலம், அன்புள்ள காதலுக்கு, மன்னவரு சின்னவரு, தங்கமணி ரங்கமணி, மகா நடிகன், ஜி, சீனா தானா 001, எல்லாம் அவன் செயல், ஒருவர் மீது இருவர் சாய்ந்து, அலேக்ஸ் பாண்டியன், வரவு நல்ல உறவு