Saturday, June 27
Shadow

இயக்குனர் ரஞ்சித் ஹிந்திக்கு போன மர்மம என்ன

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் மிக பெரிய இடத்தை அடைந்த இயக்குனர் என்றால் அது இயக்குனர் ரஞ்சித் என்று சொன்னால் மிகையாகது காரணம் தொடர்ந்து இரண்டு ரஜினி படங்களை இயக்குனர் பட்டியலில் இவருக்கு இடம் உண்டு அதோடு

காலா படத்தை அடுத்து அமீர்கான் நடிக்கும் ஹிந்திப்படத்தை பா.ரஞ்சித் இயக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியானது. அதன் பிறகு என்ன நடந்ததோ… பா.ரஞ்சித் படத்தில் அமீர்கான் நடிக்கவில்லை என்ற தகவல் வெளியானது.

இந்நிலையில், பிரபல ஈரானிய இயக்குனர் மஜித் மஜ்தி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான பியான்ட் த க்ளவுட்ஸ் (‘Beyond The Clouds’) என்ற ஹிந்தி படத்தை தயாரித்த நிறுவனங்களில் ஒன்றான நம பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் ஹிந்திப்படத்தை பா.ரஞ்சித் இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படம் வரலாற்று பின்னணியில் உருவாக இருக்கிறது. பா.ரஞ்சித் திடீரென பாலிவுட்டுக்குப் போனது ஏன்? அண்மையில் பா.ரஞ்சித்துடன் நட்பான குஜராத் எம்.எல்.ஏ.,வான ஜிக்னேஷ் மேவானியின் முயற்சியிலேயே அவருக்கு ஹிந்திப்பட வாய்ப்பு கிடைத்திருப்பதாக சொல்லப்படுகிறது