Tuesday, October 4
Shadow

தயாரிப்பாளர் ஆகும் கபாலி இயக்குனர் ரஞ்சித்

ரஞ்சித் இன்று தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர் அதற்கு காரணம் அவரின் படைப்புகள் முதல் படம் அட்டகத்தி இரண்டாவது படம் மெட்ராஸ் தமிழில் மாபெரும் வெற்றி வெற்றி மட்டும் இல்லை சினிமா ரசிகர்களை சிந்திக்க வைத்த படம் என்றும் சொல்லணும் இரண்டு படங்களிலும் நல்ல கருத்துகளை கொண்ட படம் இவரின் மூன்றாவது படம் உலக தமிழர்களை வியக்க வைத்த படம் அது ரஜினி என்பதற்காக இல்லை ரஜினி என்ற மூன்று எழுத்தை தன் வசம் வைத்து ரஜினி சினிமா வாழ்கையில் இல்லாத ஒரு கதைனடிப்பு இப்படி பல வித்தியாசங்கள் அதோடு படத்தின் கதையில் ஒரு மிக முக்கிய முற்போக்கு சிந்தனை இதேவே இவரின் தனி தன்மை என்று நிரூபித்தவர் இது ரஜினியை கவர என் அடுத்த படத்தையும் நீங்களே இயக்குங்கள் என்று அழைப்பு விடுக்க விரைவில் தொடங்க இருக்கிறார்.

கபாலி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் ரஞ்சித் அடுத்ததாக மீண்டும் ரஜினியுடன் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றவுள்ளார். இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ளது.

இதற்கிடையில் ‘நீளம் புரொடக்ஷன்ஸ்’ எனும் பெயரில் பட தயாரிப்பு நிறுவனம் ஒன்று தொடங்கியுள்ள ரஞ்சித், இதில் முதலாவதாக தனது உதவியாளர் மாரி இயக்கும் படத்தை தயாரிக்கவுள்ளார். இப்படத்தில் கிருமி புகழ் கதிர் ஹீரோவாகவும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கவுள்ளனர்.

Leave a Reply