
பாகுபலி முதல் பாகம் வெற்றியைதொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் மாதம் 28ம் ரிலீஸ் ஆக இருக்கிறது இதன் இறுதிகட்ட வேலைகள் மிக வேகமாக நடந்து வருகிறது அதே நேரத்தில் இந்த படத்தின் ப்ரோமோஷன் வேலைகளும் இந்தியா நுழுவதும் இந்த படகுழுவினர்கள் கலந்து கொண்டு பெசிவர்கிரார்கள் அப்படிபேசும்போது இயக்குனர் ஷங்கர் மற்றும் ராஜாமௌலியை இணைத்து ஒரு கேள்வி கேட்டார்கள் அதுக்கு ராஜமௌளியின் பதில் இதோ
ஷங்கர் என் குரு இல்லை. தயவு செய்து என்னை அவருடன் ஒப்பிடாதீர்கள் என்று இயக்குனர் ராஜமவுலி தெரிவித்துள்ளார். எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கியுள்ள பாகுபலி 2 படம் வரும் 28ம் தேதி பிரமாண்டமாக ரிலீஸாக உள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடந்தது. நிகழ்ச்சியில் ராஜமவுலி, பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பாகுபலி 2 படத்தில் விஎஃப்எக்ஸ் பணிகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது.
ராஜமவுலியின் டைரக்ஷன் ஸ்டைல் மற்றும் விஎஃப்எக்ஸ் பயன்பாட்டை பார்த்து பலரும் அவரை இயக்குனர் ஷங்கருடன் ஒப்பிட்டு பேசி வருகிறார்கள்.
ஷங்கருடன் ஒப்பிடுவது குறித்து ராஜமவுலி செய்தி இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், ஷங்கர் என் குரு இல்லை, நான் அவரிடம் பணியாற்றியது இல்லை. ஆனால் அவருடன் என்னை ஒப்பிடுவது மகிழ்ச்சியாக இருந்தாலும் வெட்கமாக உள்ளது. தயவு செய்து என்னை அவருடன் ஒப்பிடாதீர்கள் என்றார்.
பாகுபலி மற்றும் பாகுபலி 2 படங்களுக்காக ராஜமவுலி 5 ஆண்டுகள் செலவிட்டுள்ளார். இந்த 5 ஆண்டுகளும் ஹீரோ பிரபாஸ் வேறு எந்த படங்களிலும் கமிட் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பாகுபலி, பாகுபலி 2 படங்களை போன்று இல்லாமல் விஎஃப்எக்ஸ்-ஐ பயன்படுத்தாமல் சாதாரண படம் எடுக்க விருப்பம் தெரிவித்துள்ளார் ராஜமவுலி. அவர் எப்படி படம் எடுத்தாலும் அதில் நடிக்க பலரும் ஆவலாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
