
இயக்குனர் ஷங்கர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வைத்து தற்போது இல்லை கடந்த இரண்டு வருடங்களாக இயக்கி வரும் படம் 2.௦ இது நாம் அறிந்த விஷயம் இந்த படத்தின் போஸ்டர் முதல் பார்வை டீசர் இப்படி எதுவும் விடாமல் பொத்தி பொத்தி பாதுகாத்து வருகிறார் காரணம் படத்தின் புகைப்படங்கள் டீசர் வந்து விட்டால் படத்தின் சுவாரிசம் போய்விடும் என்பதால் தீவிர கவனத்துடன் இருக்கிறார் இயக்குனர் ஷங்கர் . ஆனால், அதையும் மீறி ஒன்றிரண்டு தகவல்கள் வெளியில் கசிந்து கொண்டுதான் இருக்கின்றன.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வைத்து தற்போது படத்தை இயக்கிவரும் இயல்பான இயக்குநர் பா. ரஞ்சித் , படத்தின் தலைப்பையும், ஃபர்ட்ஸ் லுக்கையும் ரிலீஸ் செய்துவிட்டுத்தான் ஷூட்டிங்கையே ஆரம்பித்தார். அதுமட்டுமல்ல, முதல்நாள் படப்பிடிப்பு முடிந்த உடனேயே, அன்று மாலையே சுடச்சுட சில புகைப்படங்களையும் வெளியிட்டார். தினமும் ஏதாவது ஒரு புகைப்படம் வெளிவந்து, அது வைரல் ஆகிக் கொண்டிருக்கிறது.
இதைக் கண்டு கடுப்பான பிரமாண்ட இயக்குநர், தன் படத்தில் இருந்து சில புகைப்படங்களைக் கசியவிட்டார். ஆனால், ஒன்றிரண்டு பேரைத் தவிர அதைச் சீண்டுவார் இல்லை. எல்லோருமே இயல்பான இயக்குநர் புகைப்படங்களையே ஷேர் செய்ய, எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றிய போல பிரமாண்ட கடுப்பில் இருக்கிறாராம் இயக்குநர் ஷங்கர் .
