
அஜித் நடித்த ‘கிரீடம்’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விஜய். அந்தப் படத்திலிருந்து தற்போது அவர் இயக்கி வரும் ‘தேவி’ படம் வரை 8 படங்களுக்கு ஜி.வி.பிரகாஷ் தான் இசையமைப்பாளர்.
அவர் இயக்கிய இரண்டாவது படமான ‘பொய் சொல்லப் போறோம்’ படத்தில் மட்டுமே வேறு இசையமைப்பாளர். இயக்குனர் விஜய்யும், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷும் இணை பிரியாத நண்பர்களாக இருந்தனர். இந்தக் கூட்டணி தற்போது பிரிந்துவிட்டது. அதற்குக் காரணம் ஜி.வி.பிரகாஷின் நடிப்பு ஆர்வம்தான் காரணம்.
விஜய் அடுத்து இயக்க உள்ள ஜெயம் ரவி நடிக்கும் படத்தின் அதிகாரப்பூர்வப் பணிகள் இன்று முதல் ஆரம்பமாகின்றன. இந்தப் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
ஜி.வி.பிரகாஷ் அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருவதால் இசையமைக்க நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறாராம். அதனால் தான் நடிக்கும் படங்களைத் தவிர மற்ற படங்களுக்கு இனி இசையமைக்கப் போவதில்லை என முடிவெடுத்துள்ளாராம்.
அதனால்தான் விஜய் – ஜெயம் ரவி படத்திற்கு அவர் இசையமைக்கவில்லை என்கிறார்கள். இதை தன்னுடைய நண்பன் விஜய்யிடம் ஓபனாகவே சொல்லிவிட்டாராம். அதற்கு சம்மதித்து விஜய்யும் ஹாரிஸ் ஜெயராஜை தன் படத்திற்கு ஒப்பந்தம் செய்துவிட்டாராம்.
விஜய் – ஜி.வி.பிரகாஷ் கூட்டணி இணைந்த படங்களில் நா.முத்துக்குமார்தான் அதிகப் பாடல்களை எழுதியிருப்பார். அதில் பல பாடல்கள் சூப்பர் ஹிட்டாக அமைந்தவை.
நா.முத்துக்குமார் மறைவுக்குப் பின்னர் விஜய் தற்போது ஹாரிஸ் ஜெயராஜுடன் வைத்துள்ள கூட்டணியில் பாடலாசிரியராக யார் இணையப் போகிறார்கள் என்பதும் கேள்வியாக உள்ள