
‘திரிஷ்யம் 3’ தெலுங்கு உரிமை விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் சட்டப்போராட்டம் தொடங்கிய ராஜ்குமார் தியேட்டர்ஸ்!
மலையாள திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘திரிஷ்யம் 3’ திரைப்படத்தைச் சுற்றி தற்போது புதிய சட்டப்பரபரப்பு உருவாகியுள்ளது. மோகன்லால், மீனா உள்ளிட்டோர் நடிப்பில், இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் தெலுங்கு மொழி உரிமையைச் சார்ந்த விவகாரம் சென்னை உயர்நீதிமன்றத்தை எட்டியுள்ளது.
திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் மற்றும் வெளியீட்டு உரிமைகளின் பிரத்யேக உரிமையாளர்கள் தாங்களே எனக் கூறும் ராஜ்குமார் தியேட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், தனது பதிப்புரிமையைப் பாதுகாக்கும் நோக்கில் நீதிமன்றத்தை நாடியுள்ளது. நடிகையும் தயாரிப்பாளருமான ஸ்ரீப்ரியா சேதுபதி மற்றும் ராஜ்குமார் சேதுபதி தலைமையிலான இந்த நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், ‘திரிஷ்யம் 3’ படத்தின் தெலுங்கு வடிவமைப்பு, தயாரிப்பு அல்லது வெளியீடு தொடர்பாக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது என நிரந்தரத் தடை கோரப்பட்டுள்ளது.
மேலும், ஆசிர்வாத் சினிமாஸ் சார்பில் எம்.ஜே. ஆண்டனி, இயக்குநர் ஜீத்து ஜோசப், பனோரமா ஸ்டுடியோஸ், பென் ஸ்டுடியோஸ் உள்ளிட்டோர் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய தரப்பினருக்கு எதிராகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று (மே 20) சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. ராஜ்குமார் தியேட்டர்ஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கே. ரவி ஆஜராகி வாதங்களை முன்வைத்தார். வழக்கை பரிசீலித்த நீதிமன்றம், எதிர்மனுதாரர்கள் அனைவரும் மூன்று வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதனிடையே, வழக்கு நிலுவையில் இருக்கும் சூழலில், ‘திரிஷ்யம் 3’ திரைப்படத்தின் தெலுங்கு உரிமைகள் தொடர்பாக யாரேனும் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், ஓடிடி தளங்கள் அல்லது பிற வணிக தரப்புகள் ஒப்பந்தங்களில் ஈடுபட்டால், அது அவர்களது சொந்த பொறுப்பிலேயே அமையும் என ராஜ்குமார் தியேட்டர்ஸ் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
திரைப்பட உலகில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ள இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை தற்போது எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.
‘Drishyam 3’ Telugu Rights Dispute Reaches Madras High Court; Rajkumar Theatres Initiates Legal Action
A fresh legal controversy has emerged around the much-anticipated Malayalam film ‘Drishyam 3’, starring and , and directed by .
Rajkumar Theatres Private Limited, headed by actress-producer and Rajkumar Sethupathi, has approached the claiming exclusive ownership of the Telugu remake and release rights of ‘Drishyam 3’. The company has initiated legal proceedings to safeguard its copyright and intellectual property rights related to the film’s Telugu adaptation.
In the petition filed before the court, the company has sought a permanent injunction restraining Aashirvad Cinemas’ M.J. Antony, director Jeethu Joseph, , Pen Studios, and their associates, representatives, employees, or license holders from remaking, producing, or releasing ‘Drishyam 3’ in Telugu anywhere in the world.
The matter came up for hearing on May 20, 2026, before the Madras High Court. Senior advocate K. Ravi appeared on behalf of Rajkumar Theatres and presented arguments before the court. After hearing the submissions, the court directed all respondents to file their replies within three weeks and issued notices accordingly.
Meanwhile, Rajkumar Theatres has also cautioned that since the legal proceedings are currently pending, any producer, distributor, theatre owner, OTT platform, or commercial entity entering into agreements or business understandings concerning the Telugu adaptation or Telugu release rights of ‘Drishyam 3’ would be doing so entirely at their own risk. The company further stated that any such agreements would remain subject to the final verdict of the Madras High Court.
The case has now drawn significant attention within the film industry, with many closely watching the next phase of the legal battle surrounding the highly anticipated franchise film.
