
‘ஸ்ரீ ஸ்ரீ’ எனும் இனிய தலைப்பில் துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே இணையும் புதிய காதல் திரைப்படம்; புத்துணர்வை பரப்பும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
பான் இந்தியா அளவில் உருவாகி வரும் துல்கர் சல்மானின் புதிய திரைப்படத்திற்கு ‘ஸ்ரீ ஸ்ரீ’ என்ற தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனுடன் வெளியிடப்பட்டுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், காதல், நம்பிக்கை மற்றும் நேர்மறை உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அறிமுக இயக்குநர் ரவி நேலகுதிடி இயக்கும் இந்த திரைப்படத்தை எஸ்எல்வி சினிமாஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செருகூரி தயாரிக்கிறார். இந்நிறுவனத்தின் 10-வது தயாரிப்பாக உருவாகும் இப்படம், பான் இந்தியா ரசிகர்களை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இணை தயாரிப்பாளராக இஷான் சக்சேனா பணியாற்றுகிறார்.
இந்தப் படத்தின் முக்கிய அம்சமாக, துல்கர் சல்மானும் பூஜா ஹெக்டேயும் முதல் முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர். காதல், நகைச்சுவை மற்றும் உணர்வுகளை மையமாகக் கொண்ட இந்த திரைப்படம், மென்மையான காதல் கதையை சொல்லவிருக்கிறது என்பதற்கான முதல் அறிகுறியை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே வெளிப்படுத்துகிறது.
“Love Will Spark Again” என்ற டேக்லைனுடன் வெளியாகியுள்ள போஸ்டரில், ஒரு சுவரின் மீது அமர்ந்து இயல்பாக உரையாடும் துல்கர் சல்மான் மற்றும் பூஜா ஹெக்டே ஆகியோரின் தோற்றம், பழைய நினைவுகளை மீட்டெடுக்கும் காதல் கதையை சுட்டிக்காட்டுகிறது. எளிமையான பின்னணி, இயல்பான உடல்மொழி மற்றும் இருவரின் புன்னகை ஆகியவை, கதாபாத்திரங்களுக்கிடையேயான நெருக்கத்தை அழகாக வெளிப்படுத்துகின்றன.
கல்லூரி நண்பர்களைப் போன்ற தோற்றத்தில் காட்சியளிக்கும் இந்த ஜோடியின் கெமிஸ்ட்ரி ஏற்கனவே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், தற்போது வெளியான தலைப்பும் ஃபர்ஸ்ட் லுக்கும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.
தொழில்நுட்ப ரீதியாகவும் வலுவான அணியை இப்படம் கொண்டுள்ளது. ஒளிப்பதிவை அனய் ஓம் கோஸ்வாமி மேற்கொள்கிறார். இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்க, கலை இயக்கத்தை அவிநாஷ் கொல்லா கவனிக்கிறார்.
‘ஸ்ரீ ஸ்ரீ’ திரைப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
நடிகர்கள்
- துல்கர் சல்மான்
- பூஜா ஹெக்டே
தொழில்நுட்பக் குழு
- கதை, இயக்கம் – ரவி நேலகுதிடி
- தயாரிப்பாளர் – சுதாகர் செருகூரி
- தயாரிப்பு நிறுவனம் – எஸ்எல்வி சினிமாஸ்
- இணை தயாரிப்பாளர் – இஷான் சக்சேனா
- தலைமை நிர்வாக அதிகாரி – விஜய் குமார் சாகண்டி
- இசை – ஜி.வி. பிரகாஷ் குமார்
- ஒளிப்பதிவு – அனய் ஓம் கோஸ்வாமி
- கலை இயக்கம் – அவிநாஷ் கொல்லா
- மக்கள் தொடர்பு – யுவராஜ்

Dulquer Salmaan and Pooja Hegde’s Pan-India Romantic Entertainer Titled ‘Sri Sri’; Refreshing First Look Unveiled
The makers of Dulquer Salmaan’s upcoming Pan-India film have officially unveiled its title as ‘Sri Sri’, along with a refreshing first-look poster that has instantly captured the attention of movie lovers. Filled with warmth, positivity, and youthful charm, the poster offers a glimpse into what promises to be a heartwarming romantic entertainer.
Directed by debutant Ravi Nelakuditi, the film is produced by Sudhakar Cherukuri under the prestigious SLV Cinemas banner. Marking the production house’s landmark 10th venture, the project is being mounted on a grand scale for audiences across India. Ishan Saksena serves as the co-producer.
One of the film’s biggest highlights is the fresh pairing of Dulquer Salmaan and Pooja Hegde, who are sharing screen space for the first time. Blending romance, humour, and heartfelt emotions, the film aims to present a wholesome love story with universal appeal.
The film carries the tagline “Love Will Spark Again,” hinting at a story centred on rediscovering love, hope, and meaningful relationships. The first-look poster features Dulquer Salmaan and Pooja Hegde seated casually on a compound wall, sharing a cheerful conversation. Their simple styling, natural expressions, and effortless chemistry create an atmosphere of innocence, nostalgia, and companionship, suggesting a beautiful bond between their characters.
Earlier working stills from the sets had already generated excitement among fans, and the title announcement, along with the first-look poster, has further heightened expectations for the film.
The film also brings together an accomplished technical team. Anay Om Goswamy handles cinematography, while GV Prakash Kumar composes the music. Avinash Kolla is the production designer, contributing to the film’s visual appeal.
Planned as a Pan-India release, Sri Sri will hit theatres in Telugu, Tamil, Hindi, Kannada, and Malayalam.
Cast
- Dulquer Salmaan
- Pooja Hegde
Technical Crew
- Writer & Director: Ravi Nelakuditi
- Producer: Sudhakar Cherukuri
- Production Banner: SLV Cinemas
- Co-Producer: Ishan Saksena
- CEO: Vijay Kumar Chaganti
- Music: GV Prakash Kumar
- Director of Photography: Anay Om Goswamy
- Production Designer: Avinash Kolla
- PRO: Yuvraaj
