
துல்கர் சல்மானின் ‘AOT’ திரைப்பட டீசர் வெளியீடு – குடும்பத்துடன் ரசிக்கக் கூடிய அழகான கதையுடன் நவம்பர் 20-ல் திரைக்கு வருகிறது!
நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள ‘AOT’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் காட்டும் துல்கர் சல்மான், இந்தப் படத்தின் மூலம் மீண்டும் ஒரு புதிய திரைப்பயணத்தைத் தொடங்கியுள்ளார். குடும்பத்துடன் அமர்ந்து ரசிக்கும் வகையிலான அழகான திரைப்படமாக ‘AOT’ உருவாகியுள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.
‘AOT’ திரைப்படத்தை வித்தியாசமான கதை சொல்லும் முறைக்காக அறியப்படும் இயக்குநர் பவன் சாதினேனி இயக்கியுள்ளார். லைட்பாக்ஸ் மீடியா சார்பில் சந்தீப் குன்னம் மற்றும் ரம்யா குன்னம் தயாரித்துள்ள இப்படத்தை கீதா ஆர்ட்ஸ் மற்றும் ஸ்வப்னா சினிமா நிறுவனங்கள் வழங்குகின்றன.
இப்படத்தில் ஸ்ருதி ஹாசன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கதையின் மையத்தில் இடம்பெறும் கதாபாத்திரத்தில் சாத்விகா வீரவல்லி அறிமுகமாகிறார். எளிமையான தோற்றம் கொண்ட ஒரு பெண், தனது கனவுகளையும் லட்சியங்களையும் நோக்கிப் பயணிக்கும் கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். தனக்குக் கிடைத்த இந்த வாய்ப்பை அவர் சிறப்பாகப் பயன்படுத்தியுள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.
கதாநாயகனாக மட்டுமின்றி, நல்ல கதைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் துல்கர் சல்மான், கதாநாயகியை மையமாகக் கொண்ட கதைகளிலும் நடிக்கத் தயங்குவதில்லை. அந்த வகையில், கதையை முன்னிலைப்படுத்தும் அவரது தேர்வுகளில் ‘AOT’ திரைப்படமும் இணைந்துள்ளது.
படத்தின் தொழில்நுட்பக் குழுவும் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளது. ஒளிப்பதிவாளர் சுஜித் சாரங், கிராமப்புற வாழ்க்கையின் இயல்பையும் அழகையும் திரையில் கொண்டுவந்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் குமாரின் பின்னணி இசை படத்தின் உணர்வுப்பூர்வமான தருணங்களுக்கு வலுசேர்க்கிறது. தயாரிப்பு வடிவமைப்பாளர் ஸ்வேதா சாபு சிரிலின் கலைநயமிக்க பணியும் படத்தின் காட்சிகளுக்கு கூடுதல் அழகைச் சேர்த்துள்ளது.
வெளியாகியுள்ள டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள நிலையில், ‘AOT’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் பான் இந்தியா முறையில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
‘மகாநதி’, ‘சீதா ராமம்’, ‘கல்கி 2898 AD’ உள்ளிட்ட படங்களின் மூலம் இணைந்து பணியாற்றிய துல்கர் சல்மான் மற்றும் ஸ்வப்னா சினிமா கூட்டணி, ‘AOT’ படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளது. கீதா ஆர்ட்ஸ் போன்ற முன்னணி நிறுவனங்களின் ஆதரவும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இப்படம் வரும் நவம்பர் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
நடிகர்கள்: துல்கர் சல்மான், சாத்விகா வீரவல்லி, ஸ்ருதி ஹாசன் மற்றும் பலர்.
தொழில்நுட்பக் குழு:
- இயக்குநர்: பவன் சாதினேனி
- எழுத்தாளர்: கங்கராஜு குன்னம்
- தயாரிப்பாளர்கள்: சந்தீப் குன்னம், ரம்யா குன்னம்
- வழங்குபவர்கள்: கீதா ஆர்ட்ஸ், ஸ்வப்னா சினிமா
- இசை: ஜி.வி. பிரகாஷ் குமார்
- ஒளிப்பதிவு: சுஜித் சாரங்
- தயாரிப்பு வடிவமைப்பு: ஸ்வேதா சாபு சிரில்
Dulquer Salmaan’s AOT Teaser Promises a Heartwarming Family Entertainer; Film to Release on November 20!
The teaser of AOT, starring versatile actor Dulquer Salmaan, has been released, raising expectations among moviegoers. Known for choosing distinctive and compelling stories, Dulquer Salmaan is set to entertain audiences with another promising film. The makers describe AOT as a beautiful entertainer that families can enjoy together.
Directed by Pavan Sadineni, who is known for his distinctive storytelling and unconventional approach to filmmaking, the film is presented by Geetha Arts and Swapna Cinema. Sandeep Gunnam and Ramya Gunnam are producing the project under the Lightbox Media banner.
The film features Shruti Haasan in a significant role, adding to its star appeal. Satvika Veeravalli makes her debut in a prominent role, portraying a simple, girl-next-door character with extraordinary dreams and aspirations. The young actress is said to have made the most of this promising opportunity.
Dulquer Salmaan has consistently demonstrated his willingness to choose stories that go beyond the conventional hero-centric narrative. His decision to be part of a story that gives prominence to the female lead reflects his belief that the strength of a film lies in its overall narrative rather than the importance of an individual character. With AOT, he continues his journey of supporting distinctive storytelling.
The film also boasts a talented technical team. Cinematographer Sujith Sarang captures the natural charm and authenticity of rural life, bringing its atmosphere to the screen with visual richness. Music composer G. V. Prakash Kumar enhances the emotional depth of the film with his evocative background score. Production designer Shwetha Sabu Cyril further elevates the film’s visual appeal with her impressive work.
The newly released teaser has heightened curiosity about the film, which is gearing up for a pan-India theatrical release in Telugu, Tamil, Hindi and Malayalam.
AOT also marks the reunion of Dulquer Salmaan and Swapna Cinema following their memorable collaborations on films such as Mahanati, Sita Ramam and Kalki 2898 AD. With the backing of reputed production banners, the film is expected to be another notable addition to their successful association.
AOT is scheduled to hit theatres on November 20.
Cast: Dulquer Salmaan, Satvika Veeravalli, Shruti Haasan and others.
Technical Crew:
- Director: Pavan Sadineni
- Writer: Gangaraju Gunnam
- Producers: Sandeep Gunnam and Ramya Gunnam
- Presented by: Geetha Arts and Swapna Cinema
- Music: G. V. Prakash Kumar
- Cinematography: Sujith Sarang
- Production Design: Shwetha Sabu Cyril
Watch the teaser: https://www.youtube.com/watch?v=XDN5BFVV_zs
