Wednesday, October 27
Shadow

எங்கம்மா ராணி – திரைவிமர்சனம் ( பாசம் Rank 3/5 )

கடந்த வாரம் பிரமாண்ட பாகுபலி படத்தில் இருந்து பலரும் இன்னும் மீளமுடியாமல் தவிக்குற உங்களுக்கு இதோ ஒரு பாச பிணைப்பு என்று சொல்லும் படம் எங்க அம்மா ராணி என்று சொல்லலாம் முழுக்க முழுக்க மிகவும் எதார்த்தமான பாசபோரட்டம் தான் இந்த படம். முழுக்க முழுக்க மலேசியாவில் இந்த படத்தை இயக்க்யுள்ளார் இயக்குனர். ஒரு தாய் தன் குழந்தைகளுக்காக என்ன வேண்டுமானுலும் செய்வாள் என்பது தான் படத்தின் ஒன் லைன்

‘இசைஞானி’ இளையராஜா இசையில், சாய் தன்ஷிகா கதையின் நாயகியாக நடிக்க, எஸ்.பாணியின் எழுத்து, இயக்கத்தில், எம்.கே.பிலிம்ஸ் பேனரில் சி.முத்துகிருஷ்ணன் தயாரிப்பில் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ் தியேட்டர்ஸ் எஸ்.மதன் வெளியீடு செய்ய, ‘பெற்ற தாயின் உன்னதத்தை’ வேறு ஒரு கோணத்தில் சொல்லி வந்திருக்கும் மற்றுமொரு படமே”எங்கம்மா ராணி.”

தன்ஷிகா மலேசியாவில் ஒருவரை திருமணம் செய்து இரட்டை குழந்தைகளுக்கு அம்மாவாக இந்தியா திரும்ப முடியாமல் தவித்து வருகின்றார், தன்ஷிகாவின் கணவர் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல, அவர் எங்கு இருக்கின்றார் என தெரியாத நிலை.

இந்நிலையில் தன்ஷிகாவின் மூத்த மகள் கொடிய நோயால் பாதிக்கப்பட்டு இறக்க, இரட்டையர்கள் என்பதால் அந்த நோய் அடுத்தவருக்கும் பரவுகின்றது.

ஏதாவது குளிர் பிரதேசம் சென்றால் அவரை காப்பாற்றலாம் என சொல்ல, வேறு இடத்திற்கு தன்ஷிகா தன் மகளுடன் குடிபெயர்கின்றார்.

அந்த இடத்தில் பல அமானுஷிய விஷயங்கள் நடக்க, அதன் பின் என்ன ஆனது என்பதே மீதிக்கதை.

தன்ஷிகா இதற்கு முன் பரதேசி படத்திலேயே ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடித்தவர் தான், இதில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்துள்ளார்,

துளசியாக சாய் தன்ஷிகா, மிகவும் இயல்பாக இரண்டு குழந்தைகளுக்கு தாயாக, தன் காணாமல் தவிக்கும் பிள்ளைகளின் நலனுக்காக மலேசியா வாழ் தமிழச்சியாக கலக்கியிருக்கிறார். இன்னொரு குழந்தையையாவது காப்பாற்றி ஆக வேண்டும் என அவர் படும் பாடு ‘உச்’ கொட்ட வைப்பது இப்படத்தை பொறுத்தவரை பலம்.

துளசியாக சாய் தன்ஷிகா, மிகவும் இயல்பாக இரண்டு குழந்தைகளுக்கு தாயாக, தன் காணாமல் தவிக்கும் பிள்ளைகளின் நலனுக்காக மலேசியா வாழ் தமிழச்சியாக கலக்கியிருக்கிறார். இன்னொரு குழந்தையையாவது காப்பாற்றி ஆக வேண்டும் என அவர் படும் பாடு ‘உச்’ கொட்ட வைப்பது இப்படத்தை பொறுத்தவரை பலம்.

முரளியாக சங்கர் ஸ்ரீஹரி, ஸ்டோர் மேனேஜர் சொக்கு எனும் சொக்கலிங்கமாக தன்ஷிகாவின் குழந்தைகளுக்கு திடீர் தாய் மாமா ஆகும் நமோ நாராயணா, ராஜனாக அணி முரளி, துளசியின் மாமனாராக இயக்குனர் மனோஜ்குமார், துளசியின் மாமியாராக ரிந்து ரவி, சென்னை சீப் டாக்டராக இப்பட மக்கள் தொடர்பாளர் ரியாஸ் கே.அகமது உள்ளிட்ட ஒவ்வொருவரும் கச்சிதம் எல்லோரும் தனக்கு கொடுத்த பங்கை மிகவும் சிறப்பாக செய்துள்ளனர்.

முதல் பாதி கொஞ்சம் எமோஷ்னலாக செல்ல, இரண்டாம் பாதி என்ன ஆகப்போகின்றதோ என எதிர்ப்பார்க்க, அடுத்தடுத்து வரும் அமானுஷிய காட்சிகள் படத்தில் எந்த இடத்திலும் ஒட்டவில்லை.

இளையராஜாவின் இசையில் “அம்மாவென்று உலகத்தில் இல்லாட்டா….”, “வா வா மகளே இன்னொரு பயணம்…”, “நெஞ்சில் தோன்றிய கனவு…” ஆகிய பாடல்கள் அமுத கானங்கள்… என்றால், பின்னணி இசை படத்தின் கதைக்கும், களத்திற்கும் கூடுதல் வலு சேர்த்திருக்கும் சுபராகம் எனலாம்.

எஸ்.பாணியின் எழுத்து, இயக்கத்தில், ஒரு சில லாஜிக் மிஸ்டேக்குகள், காட்சிப் பிழைகள் ஆங்காங்கே அங்கொன்றும், இங்கொன்றுமாக படத்தில் காணப்பட்டாலும், அம்மா பொண்ணு செண்டிமெண்ட் நம்மை மிகவும் கவர்கிறது தன்ஷிகா அந்த இரண்டு குழந்தைகளின் நடிப்பு மிகவும் நம்மை பாதிக்க வைக்கிறது

மொத்தத்தில் எங்க அம்மா ராணி செல்ல அம்மா RANK 3/5

Leave a Reply

CLOSE
CLOSE