
எங்கம்மா ராணி – திரைவிமர்சனம் ( பாசம் Rank 3/5 )
கடந்த வாரம் பிரமாண்ட பாகுபலி படத்தில் இருந்து பலரும் இன்னும் மீளமுடியாமல் தவிக்குற உங்களுக்கு இதோ ஒரு பாச பிணைப்பு என்று சொல்லும் படம் எங்க அம்மா ராணி என்று சொல்லலாம் முழுக்க முழுக்க மிகவும் எதார்த்தமான பாசபோரட்டம் தான் இந்த படம். முழுக்க முழுக்க மலேசியாவில் இந்த படத்தை இயக்க்யுள்ளார் இயக்குனர். ஒரு தாய் தன் குழந்தைகளுக்காக என்ன வேண்டுமானுலும் செய்வாள் என்பது தான் படத்தின் ஒன் லைன்
'இசைஞானி' இளையராஜா இசையில், சாய் தன்ஷிகா கதையின் நாயகியாக நடிக்க, எஸ்.பாணியின் எழுத்து, இயக்கத்தில், எம்.கே.பிலிம்ஸ் பேனரில் சி.முத்துகிருஷ்ணன் தயாரிப்பில் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ் தியேட்டர்ஸ் எஸ்.மதன் வெளியீடு செய்ய, 'பெற்ற தாயின் உன்னதத்தை' வேறு ஒரு கோணத்தில் சொல்லி வந்திருக்கும் மற்றுமொரு படமே"எங்கம்மா ராணி."
தன்ஷிகா மலேசியாவில் ஒருவரை திருமணம் செய்து இரட்டை குழந்தைகளுக்கு அம்மாவாக இந்தியா திரும்ப முடியாமல...