
நடிகர் தனுஷ் இயக்குனர் கௌதம்மேனன் கூட்டணியில் உருவாகி வரும் படம் எனை நோக்கி பாயும் தோட்டா இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் ஒரு பாடல் டிஷர் என வெளியாகி மக்கள் மனதை கொள்ளை கொண்டது
கௌதம்மேனன் படம் என்றாலே காதலும் சரி பாடல்களும் சரி கேக்க வேணாம் சத்தியமாக ஹிட் தான் அப்படி இருக்கையில் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் இசையமைப்பாளர் யார் என்று இதற்கு முன் வரை யார் என தெரியாதபடி இயக்குனர் மறைத்து வைத்தார்
இரசிகர்கள் மத்தியில் மறு வார்த்தை பேசாதே பாடலை கேட்டு விட்டு இது ரகுமான் இசை தான் என அனைவரும் மனிதில் நினைத்து கொள்ள அவர் இல்லை இந்த நடிகர் தான் இசையமைப்பாளர் என ஒரு நேர்காணலில் இயக்குனர் அறிவித்தார் யார் அவர்?
இராஜதந்திரம் படம் மூலம் நடிகராக அறிமுகம் ஆனா தர்புகா சிவா அவர் தான் இதற்கு இசை என்று கூறி உள்ளார் அவர் சசிகுமார் நடிப்பில் உருவான கிடாரி மற்றும் பலே வெள்ளைய தேவா படம் மற்றும் மோ ஆகிய படங்களுக்கு இசை தந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
