
விளையாட்டு விபரீதம் என்ற கருத்தை மையமாக வைத்து உருவாகிய படம் எவனவன் அதே போல் கோவம் ஒருவனின் வாழ்கையை புரட்டி போட்டும் விடும் என்பதையும் மையமாக வைத்துள்ளார் இயக்குனர் அறிமுக இயக்குனர் நட்டி குமார் நல்ல கருத்தை எந்த விதமான ஆபாசம் இல்லாமல் புதுமுகங்களுடன் வின்சென்ட் அசோக் மற்றும் சோனியா அகர்வால் இவர்களை முக்கியமான கதாபாத்திரமாக வலம் வரவைத்துள்ளர். அன்றாடவாழ்வில் இன்றைய இளைஞர்கள் செய்யும் தவறை படமாக எடுத்துள்ள இயக்குனரை பாராட்டனும்.
இந்த படத்தில் வின்சென்ட் அசோகன்( இக்பால் ), சோனியா அகர்வால் ( ரோஸ் ), டெல்லி கணேஷ், அகில் ( முகில் ) நயனா ( சுதா ), சந்தோஷ் , முருகாற்றுப்படை சரண் ( சதீஷ் ), சாக்ஷி, சிவா.மற்றும் பலர் நடிப்பில் அருண் பிரசாத் ஒளிப்பதிவில் பெடோ பீட் இசையில் நட்டிகுமார் கதை திரைகதை அமைத்து இயக்கி உள்ள படம் எவனவன்
தன் காதலி குளிக்கும் போது அதை வீடியோ எடுக்கும் காதலன் அந்த செல்போனை தவற விட அதனால் ஏற்ப்படும் பிரச்சனைகளை மையாமாக்கி வந்திருக்கும் திரைப்படம் எவனவன்
நாயகன் அகில் தன் காதலி நயனா வீட்டில் குளிக்கும் போது அதை வீடியோ எடுக்க இதனால் கோபமடைந்த நயனா அகிலிடம் சண்டைபோட அவள் கண் முன்னே அந்த வீடியோவை “”டெலிட்”” செய்கிறான் ஆனால் “”ரெக்கவர் சாஃப்ட்வேர்”” முலமாக அந்த வீடியோவை மீண்டும் தன் செல்போனில் பார்க்கிறான் ஆட்டோவில் செல்போனை அகில் தவற விட அது சரண் கையில் கிடைக்க அந்த செல்போனை அகிலிடம் ஒப்படைக்க சில வேலைக்களை அகிலை செய்ய சொல்கிறாம் அகில் அந்த வேலையை செய்தானா செல்போன் அவனுக்கு செல்போன் கிடைத்ததா என்பதற்க்கு விடை சொல்லும் படம் தான் எவனவன் எடுத்து கொண்ட கதை நல்ல விசயமாக இருந்தாலும் அதை சொல்லும் விதத்தில் கோட்டை விட்டு விட்டார் இயக்குனர்
நாயகன் நாயகி இருவருரிடமும் இயக்குனர் இன்னும் நன்றாக வேலை வாங்கி இருக்க வேண்டும் சஸ்பென்ஸ்க்காக அமைத்திருக்கும் திரைக்கதைதின் திருப்பங்கள் நம்பும்படியாக இல்லை
பாடல் காட்சியை “”கிரின் மேட்டில்”” எடுத்து பின்னனியில் வெளிநாட்டில் எடுத்தது போல் காட்சிகள்
எவனவன் ஏமாற்றம்