

சென்னையில் இருந்து கூப்பிடு தூரத்தில் ,<!> இருக்கும் பழஞ்சூர் பாப்பான்சத்திரத்தில் 2012-ம் வருசம் ஈவிபி பொழுது போக்கு பூங்கா திறக்கப்பட்டுச்சு
அப்பவே அரசு நிலத்தையும் ஆக்கிரமித்து இப்பூங்கா தொடங்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன.
இதனால் தொடக்ம் முதலே சர்ச்சைக்குள்ளானது இப்பூங்கா. பின்னர் மீண்டும் பொழுது போக்கு பூங்கா செயல்பட்ட போது ராட்டினத்தில் இருந்து கீழே விழுந்து அபியாமெக் என்ற விமான பணிப்பெண் பலியானார். இதனால் மீண்டும் சர்ச்சையில் சிக்கியது ஈவிபி பூங்கா.
இந்த விவகாரத்தில் ஈவிபி பொழுது போக்கு பூங்கா மூடப்பட்டு சினிமா படப்பிடிப்புகளுக்கான தளமாக மாற்றப்பட்டுச்சு.
இங்குதான் விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சிகள் படமாக்கப்பட்டன.
இந்த ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது நடிகை மதுமிதா தற்கொலைக்கு முயன்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து மதுமிதா நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
ரஜினிகாந்தின் காலா படப்பிடிப்பு இங்கு நடந்துச்சு. அப்போது 2 பேர் அடுத்தடுத்து பலியாகினர். வடமாநில இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கியும் மற்றொரு தொழிலாளர் மாடியில் இருந்து கீழே விழுந்தும் இறந்தனர்.
பின்னர் விஜய் நடித்த பிகில் படத்தின் படப்பிடிப்பின் போதும் கிரேன் அறுந்து கீழே விழுந்ததில் செல்வராஜ் என்பவர் பலியானார்.
தற்போது கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் -2 படப்பிடிப்பிலும் கிரேன் அறுந்து விழுந்ததில் 3 பேர் பலியாகினர். அடுத்தடுத்து ஈவிபி பொழுது போக்காவில் உயிர் பலிகள் நிகழ்வது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் இங்க்ந்ந் இனிமே ஷூட் வைக்காதீங்க-ன்னு பெஃப்சி கொரிக்கை வைக்கப் போகுதாம்.
