Friday, October 30
Shadow

தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஷெர்ரி அகர்வால் – “எனது திரைப்பயணத்தில் ‘சைக்கிள் கேப்’ மறக்க முடியாத படமாக இருக்கும்!”

தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஷெர்ரி அகர்வால் – “எனது திரைப்பயணத்தில் ‘சைக்கிள் கேப்’ மறக்க முடியாத படமாக இருக்கும்!”

தெலுங்கு, இந்தி, பஞ்சாபி, கன்னடம் எனப் பல மொழித் திரைப்படங்களில் நடித்து கவனம் ஈர்த்த நடிகை ஷெர்ரி அகர்வால், தற்போது ‘சைக்கிள் கேப்’ திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகிறார். தனது முதல் தமிழ்ப் படமே திரைப்பயணத்தில் மிகவும் முக்கியமான இடத்தைப் பிடிக்கும் என நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார் அவர்.

1990-களின் காதலில் இருந்த அழகான அப்பாவித்தனம், இனிமையான நினைவுகள் ஆகியவற்றை இன்றைய தலைமுறையின் காதல் உணர்வுகளுடன் இணைக்கும் வகையில் ‘சைக்கிள் கேப்’ திரைப்படம் உருவாகியுள்ளது. இசைக்கும் காதலுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் இந்தப் படம், இரண்டு தலைமுறைகளின் காதல் அனுபவங்களை ஒரே கதையில் சொல்லும் மியூசிக்கல் ரொமான்டிக் படமாக உருவாகிறது.

ட்யூப்லைட் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், எம்.ஆர். பாரதி இயக்கியுள்ள இப்படத்தில், தயாரிப்பாளரும் கதாநாயகனுமான நவாஸுடன் இணைந்து ஷெர்ரி அகர்வால் நடித்துள்ளார்.

படப்பிடிப்பு அனுபவம் குறித்து ஷெர்ரி அகர்வால் கூறுகையில்:

“ஒரு நடிகையாக ‘சைக்கிள் கேப்’ படத்தில் பணியாற்றியது எனக்கு மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது. படப்பிடிப்பு நடைபெற்ற நாட்கள் அனைத்தும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தன. படக்குழுவினர் அனைவரும் அன்புடனும் நட்புடனும் பழகினார்கள். இந்தப் படத்தின் மூலம் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ளவும் முடிந்தது. மீண்டும் இதே குழுவினருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற ஆசையும் ஏற்பட்டுள்ளது.

ட்யூப்லைட் புரொடக்‌ஷன்ஸ், தயாரிப்பாளரும் கதாநாயகனுமான நவாஸ், இயக்குநர் எம்.ஆர். பாரதி, ஒளிப்பதிவாளர் சாலமன், ஹேமந்த் செல்வராஜ், எக்ஸிகியூட்டிவ் புரொடியூசர் சுஜா சூர்ய நிலா உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் எனது நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தப் படம் நிச்சயம் ரசிகர்களுக்குப் பிடிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்றார்.

திரையுலகில் பல மொழிகளில் தனது நடிப்புப் பயணத்தைத் தொடர்ந்து வரும் ஷெர்ரி அகர்வால், தெலுங்கில் ‘ஏப்ரல் 28த் எம் ஜரிகிந்தி?’, ‘ராம் அசுர்’, ‘ஐ ஹேட் யூ’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும், டீசர் வெளியாகியுள்ள ‘எந்தவாருகானி’ மற்றும் ‘பெனாமி’ ஆகிய தெலுங்குப் படங்களிலும் நடித்துள்ளார்.

கன்னடத்தில் ‘ஆகர்ஷிதா’, இந்தியில் ‘கௌஷிகி’, ‘ஐபிஎஸ் துபே’ உள்ளிட்ட படங்களிலும் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். திரைப்படங்களுடன் இணையத் தொடர்களிலும் இசை வீடியோக்களிலும் ஷெர்ரி அகர்வால் தொடர்ந்து பயணித்து வருகிறார்.

சௌபால் தளத்தில் வெளியாகி, பின்னர் யூடியூப்பிலும் பார்வையாளர்களுக்குக் கிடைத்த பஞ்சாபி இணையத் தொடரான ‘ரேஞ்ச்’ தொடரிலும் நடித்துள்ளார். டி-சீரிஸ், ஜீ மியூசிக், ரெட் ரிப்பன் மியூசிக் உள்ளிட்ட நிறுவனங்களின் தயாரிப்பில் உருவான பல பஞ்சாபி மற்றும் இந்தி இசை வீடியோக்களிலும் இடம்பெற்றுள்ளார்.

பல மொழிகளில் நடித்த அனுபவத்துடன் தமிழில் தனது புதிய பயணத்தைத் தொடங்கும் ஷெர்ரி அகர்வாலுக்கு ‘சைக்கிள் கேப்’ ஒரு முக்கியமான மைல்கல்லாக அமைய உள்ளது. பழைய காலத்து காதலின் இனிமையையும் இன்றைய தலைமுறையின் உணர்வுகளையும் இசையின் வழியாக இணைக்கும் இந்தப் படம், தமிழ் ரசிகர்களிடையே எந்த அளவுக்கு வரவேற்பைப் பெறுகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

 

“Cycle Gap Is One of the Most Important Films in My Career,” Says Actress Sherry Agarwal Ahead of Her Tamil Debut!

Actress Sherry Agarwal, who has worked in Telugu, Punjabi, Hindi and Kannada films, is all set to make her Tamil cinema debut with Cycle Gap. Describing the film as a significant milestone in her acting journey, the actress says that her experience working on the project has been truly memorable.

Blending the innocence of 1990s romance with the emotions and sensibilities of today’s generation, Cycle Gap is being developed as an emotional musical romantic film. With music, love and relatable human emotions at its heart, the film attempts to bring together two generations of love stories through a single narrative.

Produced by Tubelight Productions and directed by M.R. Bharathi, the film features Sherry Agarwal alongside producer and lead actor Nawaz.

Sharing her experience of working on Cycle Gap, Sherry Agarwal said:

“As an actress, working on Cycle Gap has given me many unforgettable memories. The entire shooting experience was positive, and everyone on the team was extremely warm and friendly. It was also a wonderful opportunity for me to learn many new things. I would love to work with this team again.

My heartfelt wishes and gratitude to Tubelight Productions, producer and lead actor Nawaz, director M.R. Bharathi sir, cinematographer Solomon sir, Hemanth Selvaraj sir, executive producer Suja Surya Nila, and every member of the Cycle Gap team. I strongly believe that audiences will enjoy this film,” she said.

Sherry Agarwal has previously appeared in several Telugu films, including April 28th Em Jarigindi?, Ram Asur and I Hate You. She has also been part of the upcoming Telugu film Enthavarugaani, whose teaser has been released, as well as the Kannada film Aakarshita. Her Hindi film credits include Kaushiki and IPS Dubey, while she has also acted in the Telugu film Benami.

Apart from feature films, Sherry has explored the digital entertainment space. She appeared in the Punjabi web series Range, which was released on the Chaupal platform and is also available on YouTube. She has additionally featured in several Punjabi and Hindi music videos produced by leading music labels such as T-Series, Zee Music and Red Ribbon Music.

With experience across multiple film industries, Sherry Agarwal is now looking forward to beginning a new chapter in Tamil cinema with Cycle Gap. Bringing together the nostalgic charm and innocence of 1990s romance with contemporary emotions, the film aims to connect with audiences across generations through its music and heartfelt storytelling.