Friday, October 30
Shadow

காட்டு யானையின் பின்னணியில் பழங்குடி மக்களின் வாழ்க்கைப் போராட்டம்… சசிகுமார் வெளியிட்ட ‘அரிகொம்பன்’ டீசர்!

காட்டு யானையின் பின்னணியில் பழங்குடி மக்களின் வாழ்க்கைப் போராட்டம்… சசிகுமார் வெளியிட்ட ‘அரிகொம்பன்’ டீசர்!

காட்டு யானைக்கும் மனிதர்களுக்குமான உறவை மையமாக வைத்து, பழங்குடி மக்களின் வாழ்வியலையும் அவர்கள் சந்திக்கும் சவால்களையும் பேச வருகிறது ‘அரிகொம்பன்’ திரைப்படம். இப்படத்தின் டீசரை இயக்குநரும் நடிகருமான சசிகுமார் வெளியிட்டுள்ளார்.

‘எங்கேயும் எப்போதும்’, ‘சென்னையில் ஒரு நாள்’, ‘எங்க காட்டுல மழை’, ‘சிக்கிக்கு சிக்கிகுச்சு’, ‘காக்டெயில்’ உள்ளிட்ட படங்களில் நடித்த மிதுன் மகேஸ்வரன், தற்போது இயக்குநராகவும் கதாநாயகனாகவும் புதிய முயற்சியில் இறங்கியுள்ளார். மேஜிக் பிக்சர்ஸ் சார்பில் அவரே இயக்கி, நாயகனாகவும் நடித்துள்ள திரைப்படம்தான் ‘அரிகொம்பன்’.

காட்டு யானையை வெறுமனே ஒரு விலங்காகக் காட்டாமல், அது வாழும் வனப்பகுதியைச் சுற்றி வாழும் பழங்குடி மக்களின் அன்றாட வாழ்க்கை, அவர்களின் வாழ்வாதாரம் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் போராட்டங்களைப் பேசும் கதையாக இப்படம் உருவாகியுள்ளது. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் கேரளாவைச் சேர்ந்த தேவிகா கிருஷ்ணன் கதாநாயகியாக நடித்துள்ளார். ‘திருடா திருடி’ படத்தின் இயக்குநர் சுப்பிரமணியம் சிவா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தேசிய விருது பெற்ற அப்புக்குட்டி, ஆடுகளம் முருகதாஸ், ஆதிரா, மு. ராமசாமி, எதிர்நீச்சல் விமல் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அஜய் வில்லனாக நடித்துள்ளார்.

படத்தின் காட்சிகளுக்கு இயல்புத்தன்மை கொடுக்கும் வகையில், காட்டுப் பகுதியில் இரண்டு கிராமங்கள் பிரம்மாண்டமான அரங்குகளாக உருவாக்கப்பட்டுள்ளன. அந்தக் கிராமங்களின் பின்னணியில் பழங்குடி மக்களின் வாழ்க்கையையும், காட்டு யானையைச் சுற்றிய சம்பவங்களையும் விறுவிறுப்பான திரைக்கதையுடன் படமாக்கியுள்ளதாக இயக்குநர் மிதுன் மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே படத்தின் கதைக்களம் ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்றுள்ள நிலையில், தற்போது சசிகுமார் வெளியிட்டுள்ள டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. ‘அரிகொம்பன்’ திரைப்படம் வரும் டிசம்பர் 11ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

The Struggle Between Humans and Wildlife: Sasikumar Unveils the Teaser of ‘Arikomban’!

A film that explores the relationship between a wild elephant and human beings, while highlighting the lives and struggles of tribal communities, is all set to capture audiences’ attention. The teaser of ‘Arikomban’ was officially unveiled by director and actor Sasikumar.

Mithun Maheswaran, who has played lead roles in films such as ‘Engeyum Eppodhum’, ‘Chennaiyil Oru Naal’, ‘Enga Kaattula Mazhai’, ‘Sikkikku Sikkikichu’ and ‘Cocktail’, has now ventured into direction with ‘Arikomban’. Produced under the banner of Magic Pictures, Mithun Maheswaran has directed the film and also plays the lead role.

Set against the backdrop of a wild elephant and the forest it inhabits, ‘Arikomban’ explores the everyday lives of tribal communities, their livelihoods and the challenges they face. The film’s storyline is inspired by true events, adding a realistic dimension to its narrative.

Devika Krishnan, who hails from Kerala, plays the female lead. Subramaniam Siva, the director of ‘Thiruda Thirudi’, appears in an important role. The film also features National Award-winning actor Appukutty, Aadukalam Murugadoss, Aadhira, M. Ramasamy and Ethir Neechal Vimal, among others. Ajay plays the antagonist.

To bring authenticity to the story, two elaborate village sets have been constructed inside a forest setting. According to director and lead actor Mithun Maheswaran, the film has been developed with an engaging screenplay that focuses on the lives of the villagers and the wild elephant at the heart of the story.

With its intriguing storyline and realistic backdrop, ‘Arikomban’ has already generated interest among moviegoers. The teaser, unveiled by Sasikumar, has further raised expectations for the film.

‘Arikomban’ is scheduled for a worldwide theatrical release on December 11.