Saturday, August 15
Shadow

மாயாஜாலமும் மர்மமும் கலந்த ஃபஹத் பாசிலின் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ டீசர் கவனம் ஈர்ப்பு! செப்டம்பர் 11-ல் உலகம் முழுவதும் ரிலீஸ்

மாயாஜாலமும் மர்மமும் கலந்த ஃபஹத் பாசிலின் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ டீசர் கவனம் ஈர்ப்பு! செப்டம்பர் 11-ல் உலகம் முழுவதும் ரிலீஸ்

மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஃபஹத் பாசில், இதுவரை ரசிகர்கள் பார்த்திராத வித்தியாசமான கற்பனை உலக கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ (Don’t Trouble The Trouble) திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

‘பாகுபலி’ போன்ற இந்திய சினிமாவின் பிரம்மாண்ட படைப்புகளை வழங்கிய ஆர்கா மீடியா வொர்க்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, ஷோயிங் பிசினஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.எஸ். கார்த்திகேயா இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளார். புகழ்பெற்ற தயாரிப்பாளர்களான ஷோபு யார்லகட்டா மற்றும் பிரசாத் தேவினேனி ஆகியோரும் இந்த முயற்சியில் இணைந்துள்ளனர். அறிமுக இயக்குநர் ஷஷாங்க் யெலேட்டி இப்படத்தை இயக்கியுள்ளார்.

படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்ட பிரம்மாண்ட நிகழ்ச்சியில் வெளியிடப்பட்ட டீசர், முதல் காட்சியிலேயே ரசிகர்களின் கவனத்தை கவர்கிறது. ஒரு சிறுமியுடன் மாயாஜால வித்தைகளை செய்து விளையாடும் ஃபஹத் பாசில், பின்னர் அந்த சிறுமியை மறையச் செய்யும் வித்தையை நிகழ்த்த முயல்கிறார். ஆனால் அதன்பிறகு எதிர்பாராத சம்பவங்கள் தொடங்குவதால், கதையில் மர்மமும் சுவாரஸ்யமும் உருவாகிறது. அதன் பின்னர் என்ன நடக்கிறது என்ற ஆவலை ஏற்படுத்தும் விதமாக டீசர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மனதை கவரும் உணர்வுப்பூர்வமான தருணங்களும், நகைச்சுவை கலந்த காட்சிகளும், மர்மம் நிறைந்த கற்பனை உலகமும் இணைந்து டீசருக்கு தனித்துவமான அனுபவத்தை வழங்குகின்றன. ஃபஹத் பாசிலின் இயல்பான நடிப்பும், கலகலப்பான திரை தோற்றமும் டீசரின் மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளன. அவருடன் தோன்றும் சிறுமியும் தனது அழகான மற்றும் இயல்பான நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம்பிடிக்கிறார்.

படத்திற்கு காள பைரவா இசையமைத்துள்ளார். அவரது பின்னணி இசை டீசரின் மர்ம உணர்வை மேலும் வலுப்படுத்துகிறது. அதேபோல், ஒளிப்பதிவின் தரமும் காட்சிகளின் பிரம்மாண்டமும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கின்றன.

வித்தியாசமான கதைக்களம், கற்பனை கலந்த சாகசம், உணர்வுப்பூர்வமான தருணங்கள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் ஆகிய அனைத்தையும் ஒருங்கே கொண்டிருக்கும் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’, இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது.

உலகம் முழுவதும் 2026 செப்டம்பர் 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இந்த திரைப்படம் குறித்து மேலும் பல அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

Fahadh Faasil’s Fantasy Entertainer ‘Don’t Trouble The Trouble’ Teaser Unveiled; Grand Worldwide Release Set for September 11, 2026

The teaser of “Don’t Trouble The Trouble,” an upcoming fantasy entertainer starring acclaimed actor Fahadh Faasil, has been officially unveiled, generating immense excitement among movie lovers. Blending fantasy, mystery, humour and heartfelt emotions, the teaser offers a glimpse into a unique cinematic experience unlike anything seen before.

The film is produced by S.S. Karthikeya under the Showing Business banner in association with Arka Media Works, the prestigious production house behind the globally acclaimed Baahubali franchise. Renowned producers Shobu Yarlagadda and Prasad Devineni have joined hands on the project, while debutant director Shashank Yeleti helms the fantasy entertainer.

The teaser was launched at a grand event attended by the entire cast and crew. It opens with Fahadh Faasil performing magic tricks for a little girl, highlighting their heartwarming bond through a series of delightful moments. He then promises to perform an even bigger trick by making the girl disappear. However, what begins as an innocent magic act soon takes an unexpected turn, leading him into a series of mysterious and thrilling events.

Without revealing too much, the teaser builds curiosity around what happens next, teasing an engaging story packed with fantasy, adventure and emotional moments. The intriguing premise and imaginative storytelling have already captured the attention of audiences.

Fahadh Faasil’s charismatic screen presence and effortless comic timing add tremendous energy to the teaser, while the young girl impresses with her natural and charming performance. The visuals are striking, and Kaala Bhairava’s captivating background score enhances the magical atmosphere, complementing the film’s impressive cinematography.

Positioned as a wholesome fantasy entertainer with a fresh concept, “Don’t Trouble The Trouble” is expected to offer audiences a memorable theatrical experience.

The film is scheduled for a grand worldwide theatrical release on September 11, 2026. The makers are expected to announce more exciting updates about the project in the coming weeks.