ஃபஹத் ஃபாசிலின் ஃபேண்டஸி சாகசம்… அக்டோபர் 2 முதல் திரையரங்குகளில் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’!
ஃபஹத் ஃபாசிலின் ஃபேண்டஸி சாகசம்… அக்டோபர் 2 முதல் திரையரங்குகளில் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’!
எஸ். எஸ். ராஜமவுலி வழங்கும் புதிய ஃபேண்டஸி திரைப்படம் – ஃபஹத் ஃபாசில், சாரா பலேகர் இணையும் வித்தியாசமான கதை
மாறுபட்ட கதைக்களங்களையும், புதுமையான திரை அனுபவங்களையும் எதிர்பார்க்கும் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் உருவாகியுள்ள புதிய ஃபேண்டஸி திரைப்படம் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ (Don’t Trouble The Trouble). எஸ். எஸ். ராஜமவுலி வழங்கும் இப்படம் வரும் அக்டோபர் 2ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
இப்படத்தில் ஃபஹத் ஃபாசில் மற்றும் சாரா பலேகர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இருவரும் முறையே சூரி மற்றும் திவ்யா என்ற கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர். வழக்கமான கதை சொல்லும் முறையிலிருந்து விலகி, ஃபேண்டஸி, சாகசம், நகைச்சுவை என பல்வேறு அம்சங்களை இணைத்து உருவாக்கப்பட்ட...


