Friday, April 17
Shadow

முதல் முறையாக தளபதி 63 படத்தை பற்றி கருத்து தெரிவித்த ஏ.ஆர் .ரகுமான்

தளபதி 63 படம் தமிழ் சினிமாவின் மிக முக்குயத்துவம் வாய்ந்த படமாக இருக்கும் அதோடு ஹாலிவுட் நிகரான ஒரு படமாக இருக்கும். இந்த இந்திய சினிமாவின் வரலாற்றில்நிச்சயம் ஒபிடிக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது அதற்கு அச்சாரம் போடுகிறார் இசை புயல் ரகுமான் .

சர்கார் படத்துக்குப் பிறகு அட்லீ இயக்கத்தில் மூன்றாவது முறையாக இணைந்துள்ளார் நடிகர் விஜய். இந்தப் படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.விளையாட்டு பின்னணியைக் கொண்டு படம் தயாராகி வருகிறது.

இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். கதிர் இந்தப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் இந்தப்படத்துக்கு இசையமைக்கிறார்

மெர்சல், சர்கார் படங்களைத் தொடர்ந்து விஜயின் இந்தப்படத்துக்கும் ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்க உள்ளார்.படம் குறித்து சமீபத்தில் பேசிய அவர், “இந்த மாதிரியான ஒரு கதைக்கு ஹாலிவுட்டில் நான் இசையமைத்திருக்கிறேன். தென்னிந்திய சினிமாவில் இது தான் முதல்முறை. இயக்குநர் அட்லி, பீலே, லெகான் உள்ளிட்ட படங்களின் ரசிகர். அவரது இசை உணர்வு சிறப்பானது” என்று கூறியுள்ளார்.

நான் இசையமைத்த அனைத்து ஆல்பத்தையும் கேட்டிருக்கிறார். அதில் இருந்து இந்த மாதிரி பண்ணுங்களேன் சார், என்று கேட்பார். இது போல் கேட்கும் இயக்குநர்களை எனக்கு பிடிக்கும்.” என்று தெரிவித்துள்ளார்.

இவ்வாறு இசையுடன் ஒன்றிணைந்து, ரசித்து செய்யும் போது திரையில் அது சிறப்பாக வந்திருப்பதை உணர முடியும். ஏதோ பாட்டு வாங்கிவிட்டோம் என்று அடுத்த கட்டத்திற்கு செல்லாமல், ஒவ்வொன்றையும் ரசித்து ரசித்து செய்வார் அட்லி” என்று கூறியுள்ளார்