சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படம் எப்போதெல்லாம் வெளியாகிறதோ அப்போது எல்லாம் தமிழ் நாட்டு திரையரங்கில் திருவிழா கோலம் தான் எத்தனையோ நடிகர்கள் இருந்தாலும் சூப்பர் ஸ்டார் படம் என்றால் தனி மௌசு தான். ரசிகர்கள் கையில் இருந்த மொத்த பணமும் ரஜினி படத்திலேயே கரைந்துவிடும். அதற்கப்புறம் வருகிற படங்களுக்கெல்லாம் ஆயுட்கால அவஸ்தைதான் மிச்சம். கபாலி டிக்கெட் ரெண்டாயிரம் ஏன் மூவாயிரம் போன கதையெல்லாம் சரித்திரத்தில் பொறிக்கப்பட வேண்டிய விஷயங்கள்.
இந்த வருடம் எப்படி? ஏப்ரல் 27 ல் காலா. தீபாவளிக்கு 2 .0. பொங்கலுக்கு கார்த்திக் சுப்புராஜ் படம். இப்படி பத்து மாத காலத்திற்குள் மூன்று ரஜினி படங்கள் வந்தால், தியேட்டர்கள் செழிக்கும். விநியோகஸ்தர்கள் பிழைப்பார்கள். நடுநடுவே கமல் படங்கள், அஜீத், விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி படங்கள் என்று வரிசை கட்டி வந்து நின்றால், மிச்ச சொச்ச பணப்புழக்கமும் அங்கே தேங்கும்.
பட்ஜெட்டில் துண்டு விழுந்த பரிதாபத்திற்கு ஆளாகும் திருவாளர் பொதுஜனம், மற்ற மற்ற படங்களுக்கு சில்லறையை போடக் கூட மனம் வைக்க மாட்டார்கள் என்பதுதான் பொதுவான கணக்கு.