Monday, December 9
Shadow

‘எம்ஜிஆர் போல மிக சிறந்த ஆட்சியை கொடுப்பேன் ரஜினிகாந்த் வாக்குறுதி

மறைந்த முதல்வர் எம்ஜிஆர் போல தம்மால் நல்லாட்சி கொடுக்க முடியும் என்று நடிகர் ரஜினிகாந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார். வேலப்பன்சாவடியில் உள்ள எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் எம்ஜிஆரின் வெண்கல சிலையை ரஜினிகாந்த் திறந்து வைத்தார். இதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இதில் ரஜினிகாந்த ரசிகர்கள் முன்னிலையில் பேசினார். அதில் ”மக்களுக்கு இடையூறாக பேனர் வைக்கக்கூடாது என்ற நீதிமன்ற உத்தரவை மீறிவிட்டோம். மக்களே எங்களை மன்னித்துவிடுங்கள்.

எம்ஜிஆர் சிலை திறப்பதற்கான தகுதி எனக்கு உள்ளதா என்று தெரியவில்லை.” என்றார். மேலும் ”அரசியல் பேச கூடாது என்றுதான் இருந்தான். ஆனால் இப்போது என்னை அரசியல் பேச வைத்து விட்டார்கள்.கருணாநிதி, சோ ஆகியோரிடம் பேசி அரசியல் கற்றேன்.அப்படித்தான் நான் அரசியலுக்கு வந்தேன்” என்றார் மேலும் ”நான் அரசியலுக்கு வந்ததை வாழ்த்த வேண்டாம், ஏளனம் செய்யாதீர்கள்.

அரசியல் பூ பாதை இல்லை என்று எனக்கு தெரியும்” என்றார். முக்கியமாக ”எம்ஜிஆர் போல யாராலும் ஆக முடியாது. எம்ஜிஆர் ஆக நினைப்பது மிகவும் கஷ்டம் .எம்ஜிஆர் ஒரு யுக புருஷர். ஆனால் எம்ஜிஆர் போல மக்களுக்கான ஆட்சி கொடுக்க முடியும். நான் எம்ஜிஆர் போல ஆட்சி கொடுப்பேன்” என்று குறிப்பிட்டார்.

எனக்கு அரசியல் தெரியாமல் இல்லை. அரசியல் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று தெரியும்” என்றார். மேலும் ” அரசியல் எப்போது நன்றாக இருக்காது என்று தெரியும். இது முள் பாதை தான். ஆனால் அரசியல் எனக்கு நன்றாகவே தெரியும்” என்றார். மேலும் ” கருணாநிதி, சோ ஆகியோரிடம் பேசி அரசியல் கற்றேன்.அப்படித்தான் நான் அரசியலுக்கு வந்தேன். அவர்கள்தான் எனக்கு அரசியல் கற்றுக்கொடுத்தார்கள்.” என்றார்.

தமிழை பேசினால் மட்டும் தமிழ் வளராது, தமிழன் வளர்ந்தால்தான் தமிழ் வளரும். சுந்தர் பிச்சை, அப்துல்கலாம் ஆகியோரால் தமிழுக்குதான் பெருமை. ஆங்கிலத்தையும் மாணவர்கள் பேசி பழக வேண்டும். ஆங்கிலத்தில் தவறாக பேசினால் கிண்டல் செய்வார்கள். எனவே நண்பர்களுடன் ஆங்கிலத்தில் பேசி பழகுங்கள். மாணவர்கள் படிப்பில் மட்டுமே கவனத்தை செலுத்த வேண்டும். பிறகுதான் அரசியல் என்றார் ரஜினி.

அரசியலுக்கு வரக் கூடாது. அரசியல்னா என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள். நான் கட்சி தொடங்கினாலும் அதில் இணையாதீர். எனக்கு ஓட்டு மட்டும் போட்டுங்கள் போதும். மற்றபடி படிப்பில் கவனம் செலுத்தி அடுத்தடுத்த கட்டங்களுக்கு செல்லுங்கள் என்றார் ரஜினி.

இதில் ரஜினிகாந்த ரசிகர்கள் முன்னிலையில் பேசினார். அதில் ” கருணாநிதி போன்ற சிறந்த அரசியல்வாதி நாட்டில் கிடையாது. தலைவர்கள் என்றால் ஜெயலலிதாவும், கருணாநிதியும் மட்டுமே. 13 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாவிட்டாலும் கட்சியை கட்டிக்காத்தவர் கருணாநிதி” என்றார். மேலும் ” 13 ஆண்டுகள் மிகுந்த திறமைசாலியானகருணாநிதியை ஆட்சிக்கே வரவிடாமல் தடுத்தவர் எம்ஜிஆர்.நான் இன்று வாழ்க்கையில் சந்தோஷமாக இருப்பதற்கு காரணம் எம்ஜிஆர்தான். எம்ஜிஆரை பார்த்தபோது சூரியன் போன்றவருக்கு யார் சந்திரன் என்று பெயர் வைத்தார்கள் என்று யோசித்தேன். ” என்றார். மேலும் ” இந்தியாவிலேயே கட்சியை கட்டுப்பாட்டுடன், நல்ல ஆளுமையுடன் வைத்திருந்தவர் ஜெயலலிதா. அவரை போல கட்சியை யாருமே நடத்தவில்லை. ” என்றார்.

முக்கியமாக ”எம்ஜிஆர் போல யாராலும் ஆக முடியாது. எம்ஜிஆர் ஆக நினைப்பது மிகவும் கஷ்டம் .எம்ஜிஆர் ஒரு யுக புருஷர். ஆனால் எம்ஜிஆர் போல மக்களுக்கான ஆட்சி கொடுக்க முடியும். நான் எம்ஜிஆர் போல ஆட்சி கொடுப்பேன்” என்று குறிப்பிட்டார்.