Thursday, November 19
Shadow

Tag: Ashwath Marimuthu

ரஜினியுடன் தமிழில் அறிமுகம்… இயக்குநர் அவதாரத்தில் புதிய பயணம்! ராம் பொத்தினேனியின் அடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்!

ரஜினியுடன் தமிழில் அறிமுகம்… இயக்குநர் அவதாரத்தில் புதிய பயணம்! ராம் பொத்தினேனியின் அடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்!

Latest News, Top Highlights
ரஜினியுடன் தமிழில் அறிமுகம்... இயக்குநர் அவதாரத்தில் புதிய பயணம்! ராம் பொத்தினேனியின் அடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்! தெலுங்குத் திரையுலகில் தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ள நடிகர் ராம் பொத்தினேனி, தற்போது அடுத்தடுத்த புதிய முயற்சிகள் மூலம் தென்னிந்தியத் திரையுலகின் கவனத்தை ஈர்த்து வருகிறார். ஒருபுறம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து தமிழில் அறிமுகமாகும் வாய்ப்பு, மறுபுறம் எழுத்தாளர், இயக்குநர் எனப் புதிய பொறுப்புகளை ஏற்று உருவாக்கும் திரைப்படம் என அவரது திரைப்பயணத்தில் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. இதில் ரசிகர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்திருப்பது ராம் பொத்தினேனி இயக்கி நடிக்கும் #RAPO23 திரைப்படம். சர்வதேச ஆண்கள் தினத்தை முன்னிட்டு இப்படத்தின் ப்ரீ-லுக் போஸ்டரை வெளியிட்டுள்ள படக்குழு, கதையின் மையக் கதாபாத்திரமான 'லோன் வுல்ஃப்' குறித்த முதல் அறிமுகத்தை வழங்கியுள்ளது. வழ...
ரஜினியின் ‘தர்மன்’ படத்தில் ஸ்ரீலீலா இணைந்தார் – நட்சத்திரப் பட்டியலில் மேலும் ஒரு முக்கிய வரவு!

ரஜினியின் ‘தர்மன்’ படத்தில் ஸ்ரீலீலா இணைந்தார் – நட்சத்திரப் பட்டியலில் மேலும் ஒரு முக்கிய வரவு!

Latest News, Top Highlights
ரஜினியின் ‘தர்மன்’ படத்தில் ஸ்ரீலீலா இணைந்தார் – நட்சத்திரப் பட்டியலில் மேலும் ஒரு முக்கிய வரவு! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘தர்மன்’ திரைப்படத்தில் நடிகை ஸ்ரீலீலா இணைந்துள்ளார். இதனைப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கெனவே முன்னணி கலைஞர்களின் கூட்டணியால் கவனம் ஈர்த்துள்ள ‘தர்மன்’ திரைப்படத்தில் ஸ்ரீலீலாவின் வருகை, படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. ரஜினிகாந்த் நடிக்கும் இந்தப் படத்தில் ஸ்ரீலீலா எந்த மாதிரியான கதாபாத்திரத்தில் தோன்றவுள்ளார் என்பது குறித்த விவரங்களைப் படக்குழு இன்னும் வெளியிடவில்லை. இப்படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார். அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்க, அன்பறிவ் மாஸ்டர்கள் சண்டைக் காட்சிகளை வடிவமைக்கின்றனர். வித்தியாசமான கதைக்களம், பிரம்மாண்டமான திரை அனுபவம், முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களி...
ரஜினியின் 51 ஆண்டுகள்: ‘தர்மன்’ படப்பிடிப்பில் கொண்டாடப்பட்ட திரைப்பயணத்தின் மாபெரும் மைல்கல்

ரஜினியின் 51 ஆண்டுகள்: ‘தர்மன்’ படப்பிடிப்பில் கொண்டாடப்பட்ட திரைப்பயணத்தின் மாபெரும் மைல்கல்

Latest News, Top Highlights
ரஜினியின் 51 ஆண்டுகள்: ‘தர்மன்’ படப்பிடிப்பில் கொண்டாடப்பட்ட திரைப்பயணத்தின் மாபெரும் மைல்கல் சென்னை, ஆகஸ்ட் 15, 2026: ஆகஸ்ட் 15 — இந்திய சினிமா வரலாற்றில் தனி முக்கியத்துவம் பெற்ற நாள். 1975-ம் ஆண்டு இதே நாளில் வெளியான அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான ரஜினிகாந்த், தனது தனித்துவமான நடிப்பாலும், ஸ்டைலாலும், திரை ஆளுமையாலும் அடுத்தடுத்த தலைமுறைகளையும் கடந்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். திரையுலகில் தனது பயணத்தைத் தொடங்கி 51 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த முக்கியமான தருணம் ‘தர்மன்’ படப்பிடிப்புத் தளத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முன்னிலையில் நடைபெற்ற கேக் வெட்டும் நிகழ்ச்சியில், இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து உள்ளிட்ட ‘தர்மன்’ படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தை கொண்டாடினர...
‘தர்மன்’ அடுத்த கட்டத்தை நோக்கி பயணம் – ரஜினிகாந்த் படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு தொடக்கம்

‘தர்மன்’ அடுத்த கட்டத்தை நோக்கி பயணம் – ரஜினிகாந்த் படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு தொடக்கம்

Shooting Spot News & Gallerys
‘தர்மன்’ அடுத்த கட்டத்தை நோக்கி பயணம் – ரஜினிகாந்த் படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு தொடக்கம் சென்னை, ஆகஸ்ட் 14, 2026: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் பெரும் எதிர்பார்ப்புக்குரிய ‘தர்மன்’ திரைப்படம், அடுத்த கட்டப் பயணத்தைத் தொடங்கியுள்ளது. படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், நேற்று இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. ரஜினிகாந்த் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படம், இந்திய சினிமாவின் முன்னணி படைப்பாளிகள் இணைந்துள்ள பிரம்மாண்ட கூட்டணியாக உருவாகி வருகிறது. இளம் தலைமுறையின் கவனம் பெற்ற இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இப்படத்தை இயக்குகிறார். அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்க, அதிரடியான சண்டைக் காட்சிகளுக்கு அன்பறிவ் இரட்டையர்கள் பொறுப்பேற்றுள்ளனர். முதல் கட்டப் படப்பிடிப்பில் முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில்,...
Raashii Khanna Reveals What Made Her Give a Nod to Rajinikanth Starrer Dharman: It had so much heart

Raashii Khanna Reveals What Made Her Give a Nod to Rajinikanth Starrer Dharman: It had so much heart

Shooting Spot News & Gallerys
Raashii Khanna Reveals What Made Her Give a Nod to Rajinikanth Starrer Dharman: It had so much heart Raashii Khanna is stepping into one of the most exciting phases of her career, especially with Dharman, co-starring the legendary Rajinikanth. Speaking about the upcoming ambitious project, Khanna says her character sits at the “emotional core of the story” and is pivotal in moulding Dharman as a person. “After watching Dragon, I had messaged Ashwath (Marimuthu) to tell him how much I loved the film. He replied saying he'd love to collaborate with me someday. Not too long after that, he texted me again, saying, 'The time has come.' He narrated Dharman, and I instantly loved it. It had so much heart. And the opportunity to share screen space with Rajinikanth sir made it an easy 'yes',”...
பிரதீப் ரங்கநாதனின் புதிய அவதாரம்… வுமன் சென்ட்ரிக் கதையுடன் கவனம் ஈர்க்கும் #PRS01 அறிமுக காணொளி வெளியீடு!

பிரதீப் ரங்கநாதனின் புதிய அவதாரம்… வுமன் சென்ட்ரிக் கதையுடன் கவனம் ஈர்க்கும் #PRS01 அறிமுக காணொளி வெளியீடு!

Latest News, Top Highlights
பிரதீப் ரங்கநாதனின் புதிய அவதாரம்... வுமன் சென்ட்ரிக் கதையுடன் கவனம் ஈர்க்கும் #PRS01 அறிமுக காணொளி வெளியீடு!   நடிகர், இயக்குநர் என இரண்டு துறைகளிலும் தொடர்ந்து வெற்றிப் பயணம் மேற்கொண்டு வரும் பிரதீப் ரங்கநாதன், தற்போது தயாரிப்பாளராகவும் தனது புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளார். அவரது தயாரிப்பில் உருவாகி வரும் #PRS01 திரைப்படத்தின் அறிமுக காணொளி அதிகாரப்பூர்வமாக வெளியாகி, திரையுலகிலும் ரசிகர்களிடையிலும் குறிப்பிடத்தக்க எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. கதையின் மையமாக பெண்மையை முன்னிறுத்தும் இந்த திரைப்படத்தில் தென்னிந்தியாவின் முன்னணி இளம் நடிகைகளில் ஒருவரான மமீதா பைஜு கதாநாயகியாக நடித்துள்ளார். கதைக்களம், காட்சியமைப்பு மற்றும் புதிய அணுகுமுறையால் இந்த திரைப்படம் ஆரம்பத்திலிருந்தே தனித்துவமான கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்தப் படத்தின் மூலம் பிரதீப் ரங்கநாதனிடம் உதவி இயக்குநர்...
ரஜினியுடன் மீண்டும் சிம்ரன்… ‘தர்மன்’ மூலம் நீண்ட நாள் கனவு நனவானது; “என் திரைப்பயணம் முழுமை பெற்றது” என நெகிழ்ச்சி

ரஜினியுடன் மீண்டும் சிம்ரன்… ‘தர்மன்’ மூலம் நீண்ட நாள் கனவு நனவானது; “என் திரைப்பயணம் முழுமை பெற்றது” என நெகிழ்ச்சி

Latest News, Top Highlights
ரஜினியுடன் மீண்டும் சிம்ரன்... 'தர்மன்' மூலம் நீண்ட நாள் கனவு நனவானது; “என் திரைப்பயணம் முழுமை பெற்றது” என நெகிழ்ச்சி சென்னை: தமிழ் திரையுலகில் கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக முன்னணி நடிகையாக தனக்கென தனி இடத்தைத் தக்கவைத்திருக்கும் நடிகை சிம்ரன், தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'தர்மன்' திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த வாய்ப்பை தனது திரைப்பயணத்தின் மிக முக்கியமான அத்தியாயமாகக் கருதுவதாக அவர் தெரிவித்துள்ளார். இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில், ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகி வரும் 'தர்மன்' திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், படத்தில் சிம்ரன் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்திருப்பது ரசிகர்களிடையே கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சிம்ரன் கூறியதாவத...