விஜய்யின் ‘பைரவா’ பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவிருக்க, ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் ‘புரூஸ்லீ’யும் ‘பைரவா’வுடன் பொங்கலுக்கு களம் இறங்கவிருப்பதை அப்படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருக்கும் ‘பைரவா’வின் ஆடியோ உரிமையை லஹரி நிறுவனம் கைபற்றியுள்ள நிலையில், ஜி.வி.பிரகாஷின் ‘புரூஸ்லீ’ ஆடியோ உரிமையையும் இந்நிறுவனமே கைபற்றியுள்ளது. ‘பைரவா’வின் பாடல்கள் நேற்று மாலை வெளியாகி பட்டையை கிளப்பிக் கொண்டிருக்க ‘புரூஸ்லீ’யின் பாடல்களையும் மிக விரைவில் வெளியிட திட்டமிட்டுள்ளது லஹரி நிறுவனம்.
அதே நேரம் ‘புருஸ்லீ’ டிரைலரை நடிகர் சிம்பு வெளியிட ஒப்புக்கொண்டுள்ள நிலையில் ‘புரூஸ்லீ’யின் டிரைலரும் நாளை மறுநாள் (23-12-16) வெளியாகவிருக்கிறது. பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கி வரும் ’புரூஸ்லீ’யில் ஜி.வி.பிரகாஷுடன் கீர்த்தி கார்பண்டா கதாநாயகியாக நடித்து வருகிறார். ‘கெனன்யா ஃபிலிம்ஸ்’ தயாரித்து வருகிறது.