Friday, October 30
Shadow

கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ் பட திரை விமர்சனம் (ரேட்டிங் 3/5)

சி.வி.குமார் இயக்கத்தில் பிரியங்கா ருத், அஷோக் குமார், வேலு பிரகாகரன், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலரும் நடித்துள்ள `கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்’ படத்தின் விமர்சனத்தை இங்கே காணாலாம்.

படத்தின் கதாநாயகி பிரியங்கா ரூத் தன்னுடைய பெற்றோர் மற்றும் இரு சகோதிரிகளுடன் குடும்பமாக ஜெயா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்று கூறுவதை விட வாழ்ந்துள்ளார் என்று தெரிவிப்பதே சரியாக இருக்கும். இப்ராஹிம் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் அசோக் மீது ஜெயாவிற்கு காதல் ஏற்பட, அதை ஜெயாவின் குடும்பத்தார் எதிர்க்கின்றனர். இதன் காரணமாக வீட்டை விட்டு வெளியேறிய ஜெயா, இப்ராஹிமை திருமணம் செய்து கொள்ள முஸ்லீம் மதத்திற்கு மாறி தந்து பெயரை ரசியாவாக என்றும் மாற்றி கொள்கிறார். மிக பெரிய தாதாவும், தொழிலதிபருமான இயக்குனர் வேலு பிரபாகர் நிறுவனத்தில் இப்ராஹிம் வேலைக்கு சேர்கிறார்.

இந்நிலையில், இப்ராஹிமை, அவர் வீட்டின் வாசலில் காவல்துறையினர் என்கவுண்டர் செய்கின்றார். இதை பார்த்த ரசியா அதிர்ச்சி அடைந்து, இதற்கான காரணத்தை அறிந்து கொண்டு, தன்னுடைய கணவர் கொலை செயப்பட காரணமானவர்களை பழி வாங்கும் எண்ணத்தில் இறங்குகுறார். தன்னை தயார்படுத்திக்கொள்வதற்காக மும்பை சென்று, அங்கு வசிக்கும் தாதா டேனியல் பாலாஜியை சந்திக்கிறார். மீண்டும் சென்னை திரும்பிய ரசியா, தன்னுடைய கணவரை கொன்றவர்களை எப்படி பழி வாங்குகிறார் என்பதே படத்தின் மீதி கதை.

ரசியாவின் நடிப்பு அபாரம். குறிப்பாக பிரியாணி கடையில் பிரியாணி சாப்பிடும் லொது, தன்னுடைய எதிரிகள் இருவரை பார்த்தவுடனான ரியக்ஷன், அவர்களை சுட்டு வீழ்த்திவிட்டு மீண்டும் வந்து பிரியாணியை சாப்பிடும் காட்சி சிறப்பாக உள்ளன. மேலும் இவர் சண்டை காட்சிகளில் நடிக்க தன்னை நன்றாக தயார் செய்துகொண்டுள்ளார், மொத்தத்தில் பிரியங்கா ரூத் தனது கேரக்டரை சிறப்பாக செய்துள்ளார் என்பதே உண்மை.

நடிகர் அசோக், இந்த படத்தில் அளவோடு நடித்துள்ளார். இயக்குனர் வேலு பிரபாகர் புதிய பரிமாணத்தில் நடித்துள்ளார். டேனியல் பாலாஜி, வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அரசியல்வாதியாக வரும் தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன், போதை மருந்து வியாபாரம் செய்யும் லாலா சேட் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஜய் ஆகியோர் தங்களுக்கு கொடுத்த கேரக்டரை சிறப்பாக செய்துள்ளனர்.

படத்தின் ஒளிப்பதிவை புதுமுகமான கார்த்திக் கையாண்டுள்ளார். கார்த்திக்கின் ஒளிப்பதிவு படத்திற்கு ஒரு மிக பெரிய ப்ளஸ். ஒளிப்பதிவில் ஒரு புதிய நிறம் தெரிகிறது. ஒரு நல்ல ஒளிப்பதிவாளராக கார்த்திக் பேசப்படுவார். படத்தின் பாடல்களுக்கு புதுமுகம் ஹரியின் இசை நியாயம் சேர்த்துள்ளது. சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை படத்திற்கு ஒரு கூடுதல் சப்போர்ட்.

‘மாயன்’ படத்தை இயக்கிய இயக்குனர் தன்னால் ஒரு நல்ல ஆக்ஷன் கதையை எழுதவும் தெரியும் என்பதை இந்த ‘கேங்ஸ் ஆப் மெட்ராஸ்’ திரைப்படம் மூலமாக நிரூபித்துள்ளார்.