Friday, October 30
Shadow

ராக்கி தி ரிவென்ஞ் – திரை விமர்சனம் (ரேட்டிங் 3.5/5)

இயக்குனர் கே.சி.பொகாடியா இயக்கத்தில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், நாசர், சாயாஜி ஷிண்டே, பிரம்மானந்தம் ஆகியயோர் நடித்துள்ள ராக்கி திரைப்படத்தின் விமர்சனத்தை இங்கே காணாலாம்.

தனது உரிமையாளர் மீது ஒரு நாய் வைத்திருக்கும் விஸ்வாசத்தை காட்டுவதோடு, நாய் செய்யும் அதிரடி வீர சாகசமும் தான் ராக்கி திரைப்படத்தின் கதை.

நேர்மையான போலீஸ் அதிகாரியான சந்தோஷ் (ஸ்ரீகாந்த்), விபத்தில் அடிபட்ட ஒரு நாய்க்குட்டியை காப்பாற்றி, ராக்கி என்று பெயரிடுகிறார். அவரது மனைவி ராதிகாவும் (ஈஷான்யா) ராக்கியை குழந்தை போல பார்த்துக்கொள்கிறார். ராக்கியை போலீஸ் துறை துப்பறியும் நாய்கள் பயிற்சி நிலையத்தில் சேர்த்து பயிற்சி பெற வைக்கிறார். பின்னர் சந்தோஷ் ராக்கியுடன் சேர்ந்து பல வழக்குகளில் குற்றவாளிகளை எளிதாக பிடிக்கிறார்

இந்நிலையில் லோக்கல் எம்எல்ஏ தேனி தேனப்பனுடன் (சாயாஜி சிண்டே) சந்தோஷுக்கு பிரச்சினை ஏற்படுகிறது. சிறையில் இருந்து பாம் பாண்டியன் எனும் குற்றவாளியை தேடி செல்லும் போது சாயாஜி மற்றும் அவரது கூட்டாளிகளால் கொல்லப்படுகிறார் சந்தோஷ். இதையடுத்து, குற்றவாளிகளை ராக்கி எப்படி பழிவாங்குகிறது என்பது தான் மீதிப்படம்.

ராக்கி. நேர்மையான போலீஸ் அதிகாரியாக வரும் ஸ்ரீகாந்த் பிட்டாக இருக்கிறார். வேலையில் நல்ல போலீஸ் அதிகாரி, மனைவி மீது அதிக பாசம் காட்டும் கணவன் என நன்றாக நடித்திருக்கிறார். நாயகி ஈஷான்யா. அன்பான மனைவியாக நடித்துள்ளார்.

போலீஸ் கமிஷ்னர் ரோலில் வரும் நாசர், வில்லன் சாயாஜி சிண்டேவும், அவரது கூட்டாளிகளான ஓ.ஏ.கே.சுந்தர் மற்றும் கராத்தே ராஜா ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர்.

நாய்கள் பயிற்சியாளர்களாக வரும் ராஜேந்திர பிரசாத்தும், அவரது உதவியாளரும் தங்கள் பங்குக்கு காமடியால் சிரிக்க வைக்கின்றனர். இந்த படம் தெலுங்கில் இருந்து மொழி மாற்றம் செய்யப்பட்ட படம் என்றாலும், டப்பிங் படம் பார்த்த உணர்வு ஏற்படவில்லை.

படத்தின் பிளஸ்: ராக்கியின் சாகசங்கள்

படத்தின் மைன்ஸ்: ராக்கியை வைத்து செய்யபடும் காமடிகள் குறைவாக இருப்பது மட்டுமே

மொத்தத்தில் ராக்கியின் அதிரடி வீர சாகசங்களுக்காகவே கண்டிப்பாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பார்க்க வேண்டிய படம்.